சட்டசபை தேர்தலில் வெற்றி மட்டுமே...இலக்கு!கர்நாடக தலைவர்களுடன் மோடி பேச்சு

Added : செப் 04, 2022 | |
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கின்ற சட்டசபை தேர்தலில், வெற்றி மட்டுமே இலக்காக வைத்து செயல்படும்படி, மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுரைகூறியுள்ளார்.கடல்சார் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தட்சிண கன்னடாவின் மங்களூரு நகருக்கு வந்தார்.அங்கு நடந்த கூட்டத்திற்கு பின், டில்லி புறப்பட

பெங்களூரு:கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கின்ற சட்டசபை தேர்தலில், வெற்றி மட்டுமே இலக்காக வைத்து செயல்படும்படி, மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுரைகூறியுள்ளார்.

கடல்சார் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தட்சிண கன்னடாவின் மங்களூரு நகருக்கு வந்தார்.அங்கு நடந்த கூட்டத்திற்கு பின், டில்லி புறப்பட தயாரானார். அப்போது, 'கோர் கமிட்டி' எனும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும்படி கர்நாடக தலைவர்கள் அழைப்பு விடுக்க, அவரும் ஒப்பு கொண்டார்.

கூட்டத்தில் பங்கேற்புஇதையடுத்து, தன் நிகழ்ச்சி நிரலில் இல்லாவிட்டாலும், மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது. மோடி, முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி உட்பட சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

அனைத்து தலைவர்களிடமும் தனித்தனியாக விபரம் கேட்டறிந்தார். மத்திய அரசு திட்டங்கள் எப்படி மக்களை சென்றடைகிறது என்பது குறித்து விசாரித்தார்; கட்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.அனைவரது கருத்துகளையும் பொறுமையுடன் கேட்டு கொண்ட மோடி, அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்காக வைத்து செயல்படும்படி அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய - மாநில அரசு திட்டங்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏழைகளை சென்றடைவதற்குரிய பணியை மும்முரமாக செய்தல் அவசியம். அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும்.தேர்தல் முடியும் வரை சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். உட்கட்சி பிரச்னைகளை கட்சிக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். எந்த காரணத்திற்கும் வெளியில் பகிரங்கமாக பேசக் கூடாது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலையும் கருத்தில் கொண்டு இப்போதில் இருந்தே செயல்படுவதற்கு, பா.ஜ., தரப்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஆளுங்கட்சி ஆயத்தம்


அனைத்து அமைச்சர்களும், 31 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, அவரவர் தொகுதி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள், பயனாளிகளிடம் கேட்டறிந்து, பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஆளுங்கட்சி ஆயத்தமாகிறது.ச

ட்டசபை தேர்தலில் எப்படியாவது முழு பெரும்பான்மை பிடிக்கும் அளவுக்கு, எடியூரப்பாவின் முழு பலத்தையும் பயன்படுத்திக் கொள்ள, பா.ஜ., தலைவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். கர்நாடகாவில் அரை நாள் இருந்த பிரதமர் மோடி, தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஊட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X