ஆண்டாள் கோயில் யானையின் நிலை சிறப்புக்குழு அதிகாரிகள் ஆய்வு

Added : செப் 04, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 18 வயது பெண் யானை ஜெயமால்யதா நிலை குறித்து வனத்துறை, கால்நடை துறை டாக்டர்கள் கொண்ட தமிழக அரசின் சிறப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.2011ல் அசாமில் இருந்து இங்கு யானை ஜெயமால்யதா கொண்டு வரப்பட்டு கோயில் நிர்வாகம் அதை பராமரிக்கிறது. யானைக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு அதை கால்நடை துறையினர் வாரந்தோறும் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 18 வயது பெண் யானை ஜெயமால்யதா நிலை குறித்து வனத்துறை, கால்நடை துறை டாக்டர்கள் கொண்ட தமிழக அரசின் சிறப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

2011ல் அசாமில் இருந்து இங்கு யானை ஜெயமால்யதா கொண்டு வரப்பட்டு கோயில் நிர்வாகம் அதை பராமரிக்கிறது. யானைக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு அதை கால்நடை துறையினர் வாரந்தோறும் ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில் 2021 தேக்கம்பட்டியில் நடந்த முகாமில் யானையை பாகன் ராஜா தாக்கிய வீடியோவும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட பாகன் திருப்பதி, யானையை குளிப்பாட்டும் போது அடிக்கும் வீடியோ வெளியானது. இதனையடுத்து தங்கள் மாநில யானையை திரும்ப பெற, அசாம் மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.


ஆய்வு



இந்நிலையில் யானையின் தற்போதைய நிலை குறித்து வனத்துறை, கால்நடைத்துறை அதிகாரி கொண்ட தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு அதிகாரிகள், நேற்று காலை யானை தங்க வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் ரோட்டில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப் குமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை யானையின் உடல்நிலை, சாப்பிடும் உணவுகள், இருப்பிட வசதிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். நேற்று அசாம் மாநில அதிகாரிகள் குழுவினர் வரவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X