விநாயகர் சிலை வாகனம் கவிழ்ந்து ஒருவர் மரணம்; 19 பேர் காயம்

Added : செப் 04, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே விநாயகர் சிலையை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து, ஒருவர் இறந்தார். 19 பேர் காயமடைந்தனர். காரமடை நகரம், ஒன்றியத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 163 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு காரமடை நகரில் பொதுக்கூட்டம் முடிந்து, சிலைகளை ஆற்றில் கரைக்க, வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். காரமடை, தோலம்பாளையம்

மேட்டுப்பாளையம்:காரமடை அருகே விநாயகர் சிலையை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து, ஒருவர் இறந்தார். 19 பேர் காயமடைந்தனர். காரமடை நகரம், ஒன்றியத்தில், ஹிந்து முன்னணி சார்பில், 163 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு காரமடை நகரில் பொதுக்கூட்டம் முடிந்து, சிலைகளை ஆற்றில் கரைக்க, வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். காரமடை, தோலம்பாளையம் ரோடு, புஜங்கனூர், தேவனாபுரம், தேக்கம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக, வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு, விநாயகர் சிலைகள் எடுத்து சென்றனர். காரமடை சிறுமுகை ரோட்டில் உள்ள, கே.ஆர். நகர் பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை, பிக்கப் வாகனத்தில் ஏற்றி கரைப்பதற்கு கொண்டு சென்றனர். வாகனத்தை டிரைவர் பாபு, 25 ஓட்டிச் சென்றார். 20 பேர் பயணம் செய்தனர். மருதூர் அருகே செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த சந்தோஷ், 20; சந்தோஷ் குமார், 19; விமல் குமார், 17; ராம்குமார், 36; சந்துரு, 20; அர்ஜூன், 17; ரமேஷ், 25; ஜிபின், 18; பசுபதி, 23; அருண் ராஜ், 28; பிவின், 17; வெற்றிவேல், 13; தர்னேஷ், 16; பிரகாஷ், 16; சரண், 17; மனோஜ், 24; சக்திவேல், 17; அருண்பிரசாத், 12, தருண் பிரசாத், 13; தமிழரசன், 19 ஆகியோர் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்தவர்கள், காரமடை தனியார் மருத்துவமனையிலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பலனளிக்காமல், ரமேஷ், 25 இறந்தார். இது குறித்து காரமடை போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X