'கூகுள்பே, பேடிஎம்' எல்லாம் அப்புறம்...முதல்ல பி.ஓ.எஸ்., மெஷினை மாத்துங்க!ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் வேண்டுகோள்

Added : செப் 04, 2022 | |
Advertisement
செப்.;ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ். மெஷின் மற்றும் தராசுகளை புதிதாக மாற்றி கொடுக்க, அரசு முன் வரவேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் வசூலிக்கப்படும், வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்தமாக கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, பல்வேறு அறிவிப்புகளை

செப்.;ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ். மெஷின் மற்றும் தராசுகளை புதிதாக மாற்றி கொடுக்க, அரசு முன் வரவேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் வசூலிக்கப்படும், வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்தமாக கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, பல்வேறு அறிவிப்புகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ளார்.இது குறித்து, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின், மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ரேஷன் கடைகள் சம்பந்தமாக அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 'கூகுள்பே, பேடிஎம்' கொண்டு வருவது இருக்கட்டும், முதலில் ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., மெஷின் மற்றும் தராசுகளை புதிதாக மாற்றி கொடுக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.பி.ஓ,எஸ்., சரியாக வேலை செய்யாததால், ரேஷன்கடை ஊழியர்கள் பெரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்களை வழங்க முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட, பழைய தராசுகள்தான் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அடிக்கடி பழுதாவதால், சரியான எடையில் பொருட்கள் வழங்க முடியவில்லை. இவை இரண்டையும் புதிதாக மாற்றாமல், ரேஷன்கடைகளில் பிரச்னைகள் தீராது. சர்வர் பிரச்னையால் பி.ஓ.எஸ்., மெஷின் சரிவர இயங்குவதில்லை. இந்நிலையில் கூகுள்பே, பேடிஎம் மட்டும் எப்படி செயல்படும். அடிப்படையான விஷயங்களை சரி செய்யாமல், வேறு எந்த புதிய மாற்றங்களையும் ரேஷன் கடைகளில் செய்ய முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X