தொடர் மழையால்தொடர்கிறது மர்ம காய்ச்சல்| Dinamalar

தொடர் மழையால்தொடர்கிறது மர்ம காய்ச்சல்

Added : செப் 04, 2022 | |
பெரம்பலுார்:-தொடர் மழை காரணமாக, பெரம்பலுார் மாவட்டத்தில், மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பெரம்பலுார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்தது. மழை ஓய்ந்துள்ள போதிலும், காலை நேரத்தில் பனியின் தாக்கமும், பகலி வெயிலும் அதிகரித்து காணப்படுகிறது.மாறுபட்ட பருவ நிலையால், பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உபாதைகளால் அவதியடைந்து

பெரம்பலுார்:-தொடர் மழை காரணமாக, பெரம்பலுார் மாவட்டத்தில், மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

பெரம்பலுார் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்தது. மழை ஓய்ந்துள்ள போதிலும், காலை நேரத்தில் பனியின் தாக்கமும், பகலி வெயிலும் அதிகரித்து காணப்படுகிறது.மாறுபட்ட பருவ நிலையால், பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காய்ச்சலால் சிரமம் அடைந்து வருகின்றனர்.காய்ச்சல் பாதித்தவர்கள் சளி இருமல், வாந்தி, பசியின்மை, வயிற்று வலி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார, மாவட்ட தலைமை மருத்துவனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X