லாரி மோதி முதியவர் பலி:மேலும் ஒருவர் காயம்| Dinamalar

லாரி மோதி முதியவர் பலி:மேலும் ஒருவர் காயம்

Added : செப் 04, 2022 | |
க.க.சாவடி:க.க.சாவடியை அடுத்து வேலந்தாவளத்திலிருந்து, ஒத்தக்கால் மண்டபம் செல்லும் சாலையில் நேற்று காலை, முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. சாலையில் விழுந்த முதியவர் மீது லாரி ஏறி, இறங்கியதுடன், சாலை ஓரத்தில் மொபட்டுடன் நின்றிருந்தவர் மீதும் மோதியது.இதில் முதியவர் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

க.க.சாவடி:க.க.சாவடியை அடுத்து வேலந்தாவளத்திலிருந்து, ஒத்தக்கால் மண்டபம் செல்லும் சாலையில் நேற்று காலை, முதியவர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. சாலையில் விழுந்த முதியவர் மீது லாரி ஏறி, இறங்கியதுடன், சாலை ஓரத்தில் மொபட்டுடன் நின்றிருந்தவர் மீதும் மோதியது.இதில் முதியவர் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்றொருவரை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில் பலியானது, குட்டிகவுண்டன்பதி, பால் கம்பெனி பகுதியை சேர்ந்த கோபால், 77 என்பதும், காயமடைந்தது பச்சாபாளையம், மூலக்காடை சேர்ந்த கனகராஜ், 44 எனவும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X