வகுப்பறை இடித்த பள்ளிகளில் அமர இடமில்லை!சேர்க்கை அதிகரிப்பால் நெருக்கடி

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | |
Advertisement
கோவை:கொரோனா தொற்று பிரச்னைக்குப் பின், கோவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து விட்டது. ஆனால் இடிக்கப்பட்ட பழைய கட்டடங்களுக்கு பதிலாக, மாற்று வகுப்பறைகள் இன்னும் கட்டப்படாததால், பல பள்ளிகளில் மாணவர்கள் அமரவே இடமில்லை என்று புலம்புகின்றனர் தலைமை ஆசிரியர்கள்.தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளி வளாகத்திற்குள், பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும், கட்டடங்களை
வகுப்பறை இடித்த பள்ளிகளில் அமர இடமில்லை!சேர்க்கை அதிகரிப்பால் நெருக்கடி

கோவை:கொரோனா தொற்று பிரச்னைக்குப் பின், கோவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து விட்டது. ஆனால் இடிக்கப்பட்ட பழைய கட்டடங்களுக்கு பதிலாக, மாற்று வகுப்பறைகள் இன்னும் கட்டப்படாததால், பல பள்ளிகளில் மாணவர்கள் அமரவே இடமில்லை என்று புலம்புகின்றனர் தலைமை ஆசிரியர்கள்.தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளி வளாகத்திற்குள், பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும், கட்டடங்களை அப்புறப்படுத்துமாறு கடந்த டிச. மாதம் உத்தரவிடப்பட்டது.
இதன்படி கோவை மாவட்டத்தில், 140 வகுப்பறைகள், 68 கழிவறைகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாக, பட்டியல் வெளியிடப்பட்டது. கலெக்டர் அறிவுறுத்தல்படி, இக்கட்டடங்கள் இடிக்கும் பணி, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. பல பள்ளிகளில், பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், இடிக்கப்பட்ட கட்டடத்திற்கு பதிலாக, புதிய வகுப்பறைகள், கழிவறைகள் எப்போது கட்டித்தரப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'அரசுப்பள்ளிகளை பொருத்தமட்டில், தேவைக்கேற்பதான், வகுப்பறை, கழிவறைகள் கட்டித்தரப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், கூடுதல் வகுப்பறை வேண்டி, கோரிக்கை வைத்தால், குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள், காத்திருக்க வேண்டியிருக்கும். இதில், போதுமான இடவசதி இல்லாவிடில், நிதி ஒதுக்கினாலும் பலனில்லை. கொரோனா தொற்றுக்குப் பின், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. கூடுதலாக சேர்ந்த மாணவர்களை, அமர வைக்க கூட, பல பள்ளிகளில் இடவசதி இல்லை. எனவே, பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில், உடனடியாக அப்பள்ளியின் தேவைக்கேற்ப, புதிய வகுப்பறையோ அல்லது, கழிவறை அமைப்புகளையோ, கட்டித்தர நிதி ஒதுக்க வேண்டும்' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X