ஏரியா சபா அமைப்பதை தள்ளி வையுங்க!மாநகராட்சி கவுன்சிலர்கள் கெஞ்சல்

Added : செப் 04, 2022 | |
Advertisement
கோவை:கோவையில், ஏரியா சபா அமைக்கும் தமிழக அரசின் உத்தரவை ஒத்திவைக்க வேண்டும் என, மாநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.உள்ளாட்சி அமைப்புகளில், ஏரியா சபா அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும், கவுன்சிலர்களை தலைவராகக் கொண்டு தலா, 10 ஏரியா சபா அமைக்கப்பட உள்ளன.இதுதொடர்பான விளக்க கூட்டம், கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும்

கோவை:கோவையில், ஏரியா சபா அமைக்கும் தமிழக அரசின் உத்தரவை ஒத்திவைக்க வேண்டும் என, மாநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.உள்ளாட்சி அமைப்புகளில், ஏரியா சபா அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும், கவுன்சிலர்களை தலைவராகக் கொண்டு தலா, 10 ஏரியா சபா அமைக்கப்பட உள்ளன.இதுதொடர்பான விளக்க கூட்டம், கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டல அலுவலகங்களில் நேற்று நடந்தது. வடக்கு மண்டல கூட்டத்துக்கு, தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் மோகனசுந்தரி முன்னிலை வகித்தார். ஏரியா சபா அமைப்பது தொடர்பாக, அரசு உத்தரவு மற்றும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து, மாமன்ற செயலாளர் அமல்ராஜ் விளக்கினார். நகரமைப்பு பிரிவினருடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வார்டையும், வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், 10 பகுதிகளாக பிரித்து, ஏரியா சபா பிரிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:மூன்று மாதத்துக்கு ஒருமுறை அவசியம் கூட்டம் நடத்த வேண்டும். அந்தந்த ஏரியா சபாவுக்கு உட்பட்ட வாக்காளர்களை அழைக்க வேண்டும் என கூறுகிறீர்கள். இப்போதே பொதுமக்கள் ஏகப்பட்ட கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.ஏரியா சபாக்களில் அந்தந்த பகுதி வாக்காளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் என சொல்கிறீர்கள். அவர்களை அழைத்து கூட்டம் போட்டால், கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்லி சமாளிக்க முடியாது. கூட்டத்துக்கு எவ்வளவு பேரை அழைக்க வேண்டும் என்கிற எண்ணிக்கையை குறைக்க வேண்டும். ஏரியா சபா அமைப்பதை ஒத்திவைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X