சர்வர் கோளாறு; இரவிலும் நீடித்த பத்திரப்பதிவு

Added : செப் 04, 2022 | |
Advertisement
பல்லடம்:சர்வர் கோளாறு காரணமாக, பல்லடத்தில், பத்திரப்பதிவு பணிகள் இரவு வரை நீடித்தது.பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், சமீப நாட்களாக, அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறு காரணமாக, பத்திரப்பதிவு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், காலையில் துவங்கி, இரவு வரை பத்திரப்பதிவு பணிகள் நீடித்து வருகிறது.தினசரி நடக்கும் பத்திரப்பதிவுக்கு, முன்கூட்டியே டோக்கன்
சர்வர் கோளாறு; இரவிலும் நீடித்த பத்திரப்பதிவு

பல்லடம்:சர்வர் கோளாறு காரணமாக, பல்லடத்தில், பத்திரப்பதிவு பணிகள் இரவு வரை நீடித்தது.பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், சமீப நாட்களாக, அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறு காரணமாக, பத்திரப்பதிவு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், காலையில் துவங்கி, இரவு வரை பத்திரப்பதிவு பணிகள் நீடித்து வருகிறது.தினசரி நடக்கும் பத்திரப்பதிவுக்கு, முன்கூட்டியே டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. காலை டோக்கன் பெற்றவர்களுக்கு, மாலை நேரத்தில்தான் பத்திரப்பதிவு நடக்கிறது. எனில், அடுத்தடுத்து டோக்கன் பெற்றவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் கூறியதாவது:காலை, 10:00 -- 11:00 மணிக்குள் டோக்கன் பெற்றிருந்தோம். இருந்தும், முன்கூட்டியே, 9:00 மணிக்கு வந்தோம். சர்வர் பிரச்னை காரணமாக தாமதம் என்று கூறப்பட்டது. மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னும், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.மாலைக்குள் முடிந்து விடும் என்று நினைத்து காத்திருந்த சூழலில், மாலை, 5:30 மணிக்குதான், காலை 10:00 மணி டோக்கனுக்கு பத்திரப்பதிவு துவங்கியது. சர்வர் இவ்வளவு மோசமாக இருந்தால், அடுத்தடுத்து டோக்கன் பெற்றவர்களின் நிலை என்னவாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து பத்திரப்பதிவு அலுவலர்களிடம் கேட்டதற்கு, 'நீண்ட நாளாக சர்வர் பிரச்னை இருப்பதால், என்ன செய்வதென்றே தெரியவில்லை. பதிவாளர்கள் தங்களது பணியை முடித்து பத்திரங்களை ஒப்படைத்து விடுகின்றனர். ஆனால், சர்வர் இணைப்பு கிடைக்காமல் சுற்றிக்கொண்டே இருப்பதால், பத்திரப்பதிவு பணி தாமதமாகிறது,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X