எண்ணும் எழுத்தும் பயிற்சி:தன்னார்வலர்கள் பங்கேற்பு

Added : செப் 04, 2022 | |
Advertisement
திருப்பூர்:மாவட்ட குறுவள மைய அளவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி, வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்தது.கொரோனா பரவல் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் கொண்டு வரப்பட்டது.தன்னார்வலர்கள் மூலம், தினமும் பள்ளி முடிந்ததும், மாலை நேரத்தில், ஒன்றரை

திருப்பூர்:மாவட்ட குறுவள மைய அளவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி, வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடந்தது.கொரோனா பரவல் காரணமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய, 'இல்லம் தேடி கல்வி' திட்டம் கொண்டு வரப்பட்டது.தன்னார்வலர்கள் மூலம், தினமும் பள்ளி முடிந்ததும், மாலை நேரத்தில், ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம், வகுப்புகள் எடுக்கப்படுகிறது.இந்த தன்னார்வலர்களுக்கான பயிற்சி, அந்தந்த வட்டார வளமைய மேற்பார்வையில் நடந்து வருகிறது.வேலம்பாளையம் மையத்தில் ஒன்று முதல் 5 வகுப்புகளை கையாளும் துவக்க நிலை தன்னார்வலர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' சார்ந்தும், ஆறு முதல், 8 வகுப்புகளை கையாளும் உயர் துவக்க நிலை தன்னார்வலர்களுக்கு பாடம் சார்ந்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியில், 100 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்தி கண்காணித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X