உழவாரப்பணி; பக்தர்கள் பரவசம்

Added : செப் 04, 2022 | |
Advertisement
பல்லடம்;பல்லடம் அடுத்த, அல்லாளபுரத்தில், பழமை வாய்ந்த உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன.இக்கோவிலில், 27 ஆண்டுக்கு பின், வரும் 8ம் தேதியன்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளன. திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்று, உலகேஸ்வர சுவாமி கோவிலுக்கு வருகை தந்த உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.கோவில் வளாகத்தை சுத்தம்
உழவாரப்பணி; பக்தர்கள் பரவசம்

பல்லடம்;பல்லடம் அடுத்த, அல்லாளபுரத்தில், பழமை வாய்ந்த உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன.இக்கோவிலில், 27 ஆண்டுக்கு பின், வரும் 8ம் தேதியன்று, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளன. திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்று, உலகேஸ்வர சுவாமி கோவிலுக்கு வருகை தந்த உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல், சுவாமியின் கவசங்கள், பூஜை பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பராமரித்தனர். சிவனடியார் குழுவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, இன்றும் இச்சேவையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், யாகசாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதில், யாகசாலை பூஜைகள், கணபதி ேஹாமத்துடன் நாளை துவங்கிறது.கும்பாபிேஷகம் நெருங்கியுள்ளதால், அல்லாளபுரம் கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X