விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் கோலாகலம்!| Dinamalar

விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் கோலாகலம்!

Added : செப் 04, 2022 | |
திருப்பூர்:ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நகரில் முக்கிய வீதிகளில் சென்றது. இரு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி, சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். ஹிந்து முன்னணி மாநகர மாவட்டம் சார்பில்,
  விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் கோலாகலம்!

திருப்பூர்:ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நகரில் முக்கிய வீதிகளில் சென்றது. இரு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி, சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். ஹிந்து முன்னணி மாநகர மாவட்டம் சார்பில், மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைத்தனர். கடந்த மூன்று நாட்களாக அன்னதானம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்தனர்.


விசர்ஜன ஊர்வலம்


நான்காம் நாளான நேற்று விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு, செல்லம் நகர் என, மூன்று இடங்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்து அணி வகுத்து நின்றது.அதில், தாராபுரம் ரோட்டில் விசர்ஜன ஊர்வலத்தை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.கரட்டாங்காடு வழியாக, டி.கே.டி., பஸ் ஸ்டாப், மேம்பாலம், மாநகராட்சி சந்திப்பு என, ஆலாங்காட்டை சென்றடைந்தது. புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அணி வகித்து, துவக்கி வைத்தார். பல்வேறு வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பொதுக்கூட்ட இடத்தை அடைந்தது. ஊர்வலத்தை பொதுமக்கள் ரோட்டின் இருபுறங்களில் திரண்டு நின்று பார்த்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X