வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்! கலெக்டரிடம் பல்லடம் எம்.எல்.ஏ., மனு

Added : செப் 04, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் தொகுதியில் நிறைவேறாத, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம், எம்.எல்.ஏ., ஆனந்தன் மனு அளித்தார்.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும். திருப்பூர் -கோவை இடையே வணிக ரீதியான போக்குவரத்து அதிகம் என்பதால், கடந்த ஆட்சிக் காலத்தில்

பல்லடம்:பல்லடம் தொகுதியில் நிறைவேறாத, 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம், எம்.எல்.ஏ., ஆனந்தன் மனு அளித்தார்.பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும். திருப்பூர் -கோவை இடையே வணிக ரீதியான போக்குவரத்து அதிகம் என்பதால், கடந்த ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட ரிங் ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும். பல்லடம் வட்டார பொது மக்களின் குடிநீர் சேவையை போக்கும் வகையில், பல்லடத்துக்கு தனியாக கூட்டு குடிநீர் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். பல்லடம் நகராட்சிக்கு மின் மயானம், பாதாள சாக்கடை திட்டங்கள் மிகவும் அவசியமானது.பல்லடத்தை தலைமை இடமாகக் கொண்டு கோட்டாட்சியர் அலுவலகம், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும். கறிக்கோழி நலன் கருதி இறந்த கோழிகளை தீவனமாக மாற்றும் இயந்திரங்களை இலவசமாக நிறுவி தர வேண்டும்.அரசு மருத்துவமனை தரம் உயர்வு, ஆனைமலை- நல்லாறு நிறைவேற்றுதல், பொங்கலூர் ஒன்றியத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அமைத்தல், 30 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கு பட்டா வழங்குதல், பல்லடம் தொகுதியின் கீழ் மாநகராட்சி பகுதியில் இருக்கும் வார்டுகளில் சாலைகளை புதுப்பித்தல் என 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அ.தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் சித்துராஜ், நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி உட்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X