சுதந்திர நினைவு துாண் சிதிலமடைந்த அவலம்

Added : செப் 04, 2022 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தினுள், சுதந்திர தின 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில், நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்தியாகம் செய்தோரின் நினைவாக, நினைவு துாண் நிறுவப்பட்டது.ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று இந்த நினைவுதுாண் சுத்தம் செய்யப்படும்; சுற்றி வளரும்
சுதந்திர நினைவு துாண் சிதிலமடைந்த அவலம்

அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தினுள், சுதந்திர தின 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில், நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்தியாகம் செய்தோரின் நினைவாக, நினைவு துாண் நிறுவப்பட்டது.ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று இந்த நினைவுதுாண் சுத்தம் செய்யப்படும்; சுற்றி வளரும் புதர்கள் அகற்றப்படும். இம்முறையும், அதுபோன்ற பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், நினைவு துாணை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர், அதை சுற்றி அலங்காரத்துக்காக பொருத்தப்பட்டிருந்த சங்கிலி ஆகியவை சேதமடைந்து, உடைந்து கிடக்கின்றன; பூச்சு வேலை போன்று அவை, சரி செய்து வைக்கப்பட்டுள்ளதே தவிர, சிதிலமடைந்த அப்பகுதியை நிரந்தரமாக புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம், அரசுத் துறையினருக்கும் வரவில்லை; வீதி, தெரு, பள்ளிகள் தோறும் சென்று சுதந்திர வேட்கையை விதைத்த அரசியல் கட்சியினரும், இதைக் கண்டுகொள்ளவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X