பெங்களூரில் இருந்து காலி செய்வோம்:முதல்வருக்கு ஐ.டி., நிறுவனங்கள் கடிதம்!| Dinamalar

பெங்களூரில் இருந்து காலி செய்வோம்:முதல்வருக்கு ஐ.டி., நிறுவனங்கள் கடிதம்!

Added : செப் 04, 2022 | |
பெங்களூரு-மழைக்கால பிரச்னைகளை சரி செய்யாவிட்டால் பெங்களூரில் இருந்து காலி செய்ய வேண்டி வரும் என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளன.பெங்களூரு நகரில் கடந்த மாதம் 30ம் தேதி பலத்த மழை பெய்ததால் வெளிவட்ட சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உள்ளே தண்ணீர் புகுந்தது. ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலில் பல மணி நேரம் சிக்கி தவிக்க வேண்டி



பெங்களூரு-மழைக்கால பிரச்னைகளை சரி செய்யாவிட்டால் பெங்களூரில் இருந்து காலி செய்ய வேண்டி வரும் என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளன.பெங்களூரு நகரில் கடந்த மாதம் 30ம் தேதி பலத்த மழை பெய்ததால் வெளிவட்ட சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உள்ளே தண்ணீர் புகுந்தது. ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலில் பல மணி நேரம் சிக்கி தவிக்க வேண்டி இருந்தது. இதனால் அன்று மட்டும் 255 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கூறுகின்றன. இதற்கு வெளிவட்ட சாலையில் சரியான அடிப்படை வசதிகள் இல்லாததே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இந்நிலையில், பெங்களூரு வெளிவட்ட சாலை தகவல் தொழில்நுட்ப நிறுவன அசோசியேஷன் சார்பில் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:பெங்களூரின் வருவாயில் 32 சதவீதத்தை வெளிவட்ட சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் அளிக்கின்றன. மடிவாளாவின் சில்க் போர்டு முதல் கே.ஆர்., புரம் வரை 17 கி.மீ.,க்கு இடைப்பட்ட துாரத்தில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.கடந்த 2019ல் அப்போதைய முதல்வர் எடியூரப்பா, வெளிவட்ட சாலை வளர்ச்சி மேம்படுத்தப்படும் என உறுதி அளித்தார். இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எங்களுக்கு எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என தகவல் அளியுங்கள்.போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. நீண்ட காலம், தற்காலிகமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை கூற வேண்டும. எங்களது மழை கால பிரச்னையை தீர்க்காவிட்டால் பெங்களூரில் இருந்து தவிர்க்க முடியாமல் வேறு இடத்துக்கு செல்ல வேண்டி வரும். முதலீடுகள் திரும்ப பெற வேண்டி வரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X