செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 04, 2022 | |
Advertisement
தேசிய நெடுஞ்சாலையில் தரமற்ற பணிகள்பெங்களூரு: தாசரஹள்ளி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத் நேற்று கூறுகையில், ''மழையால் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தரமற்ற பணிகளே காரணம். இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே சி.பி.ஐ., அல்லது அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.கிடைக்காத சிறுத்தைக்கு
செய்திகள் சில வரிகளில்...


தேசிய நெடுஞ்சாலையில் தரமற்ற பணிகள்பெங்களூரு: தாசரஹள்ளி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத் நேற்று கூறுகையில், ''மழையால் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கு தரமற்ற பணிகளே காரணம். இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே சி.பி.ஐ., அல்லது அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.


கிடைக்காத சிறுத்தைக்கு பூஜை


பெலகாவி: நகரின் கோல்ப் மைதானத்தில், நான்கு வாரமாக ஆட்டம் காண்பிக்கும் சிறுத்தை நேற்று இரவு வரை சிக்கவில்லை. வனத்துறை ஊழியர்கள் பல்வேறு யுக்திகள் கையாண்டும் பயனில்லை. இது குறித்து, விஸ்வேஸ்வரய்யா நகரின் கார்த்திக் சிவாஜி போலெண்ணா என்பவர் தன் வீட்டில், விநாயகர் பிரதிஷ்டையுடன், சிறுத்தை பொம்மையும் வைத்து பூஜித்தார்.


பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு


பெங்களூரு: மழை பாதித்த நகரின் நல்லுார்ஹள்ளியில் மஹாதேவபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் லிம்பாவளி முன்னிலையில் மழை நீர் கால்வாய் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதி அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு பெண் ஆவணங்கள் காண்பித்து, 'எங்களுக்கு சொந்தமானது, ஆக்கிரமிக்கவில்லை' என விளக்கமளித்தார். இதை கேட்ட அவர், சத்தமாக ஒருமையில் பேசி ஆவணத்தை பறித்தார் எம்.எல்.ஏ., இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, 'நான் என்ன கற்பழித்து விட்டேனா' என, சர்ச்சைக்குரிய முறையில் பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


அமலாக்கத்துறை சோதனை


பெங்களூரு: போலி ஆவணங்களை உருவாக்கி, அதன் மூலம் சீன செயலிகள் மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள செயலிகள் மூலம் கடன் அளிக்கும் ஆறு சீன நிறுவனங்களின் மீது நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களிடம், 17 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


எழுத்தாளர் காலமானார்


ஹாசன்: ஹாசனின் பிரபல டாக்டர் குருராஜ், 72. பல்வேறு நுால்களை எழுதி உள்ளார். வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று வீட்டில் உயிரிழந்தார். இவர் 'ராஜ்யோத்சவா' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.


85 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்


பெலகாவி: பெலகாவி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி வாகனங்கள், விதிமுறையை மீறி அதிக அளவில் மாணவர்களை அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நேற்று மாவட்டம் முழுதும் சோதனை நடத்திய போலீசார், 85 பள்ளி வாகனங்களின் மீது, 129 வழக்குகள் பதிவு செய்து, 48 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.


ரசிகர்களுக்கு போட்டி வைத்த நடிகர்


பெங்களூரு: நடிகர் உபேந்திராவின் பிறந்த நாள் வரும் 18ம் தேதி வருகிறது. இந்த முறை, தன் பிறந்த நாளுக்கு உபேந்திரா ரசிகர்களுக்கு வித்தியாசமான போட்டி வைத்துள்ளார். அதன்படி ரசிகர்கள், 18 வரிகளில் ஏதாவது நல்ல கருத்துடன் கூடிய கட்டுரை எழுதினால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


ஒரு நாள் அதிகாரிக்கு அழைப்பு


பெங்களூரு: இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா வெளியிட்ட அறிக்கை:அக்டோபர் 11ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஒரு நாள் விளையாட்டு துறையில் அதிகாரியாக பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இம்மாதம் 25ம் தேதி கடைசி நாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X