மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் ஜிப்மரில் போலீஸ் தீவிர விசாரணை

Added : செப் 04, 2022 | |
Advertisement
புதுச்சேரி-ஜிப்மர் வளாகத்தில் தெலுங்கானா மாநில மருத்துவ மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்கள் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும்கலாசார விழாவில் பங்கேற்க,பல்வேறுமாநிலங்களில் இருந்தும்மருத்துவ மாணவ, மாணவிகள்வந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம்,ஹைதரபாத்தை சேர்ந்த மருத்துவ மாணவி, நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு

புதுச்சேரி-ஜிப்மர் வளாகத்தில் தெலுங்கானா மாநில மருத்துவ மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்கள் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும்கலாசார விழாவில் பங்கேற்க,பல்வேறுமாநிலங்களில் இருந்தும்மருத்துவ மாணவ, மாணவிகள்வந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம்,ஹைதரபாத்தை சேர்ந்த மருத்துவ மாணவி, நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு நடந்த கலாசார விழாவில் பங்கேற்று, தோழி மற்றும் நண்பர் ஒருவரோடு, ஜிப்மர் வளாகத்தில் நடந்து சென்றார்.அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.மாணவி கூச்சலிட்ட போதும், அங்கிருந்த ஊழியர்கள், செக்யூரிட்டிகள் கண்டுகொள்ளவில்லை.இதை சாதகமாக பயன்படுத்தி, பைக்கில் வந்த நபர்கள், மாணவியிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டனர்.உடனிருந்த நண்பர் அவர்களை தட்டிக் கேட்டபோது, 'நாங்கள்'மப்டி' உடையில் இருக்கும் போலீஸ்' என கூறி மிரட்டி உள்ளனர்.இதுகுறித்துமாணவி கோரிமேடு போலீசில் புகார்அளித்தார்.அதன்பேரில்,மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்கள்,உண்மையிலேயே'மப்டி' உடையில் வந்த போலீஸ்காரர்களா, அல்லது போலீஸ் பெயரை கூறி மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா எனதீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X