ரூ.1.36 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

Added : செப் 04, 2022 | |
Advertisement
வேப்பூர் அருகே டிரைவர் உட்பட 3 பேர் கைதுவேப்பூர்-வேப்பூர் அருகே தடை செய்த போதைப் பொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் வழியாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக திட்டக்குடி தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4:00 மணியளவில்
ரூ.1.36 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்


வேப்பூர் அருகே டிரைவர் உட்பட 3 பேர் கைது


வேப்பூர்-வேப்பூர் அருகே தடை செய்த போதைப் பொருட்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் வழியாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக திட்டக்குடி தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், நேற்று மாலை 4:00 மணியளவில் பெரியநெசலுார் சிப்காட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மஹேந்திரா பிக்கப் வேனை (டி.என்., 91 ஏ.ஒய் 6402) மடக்கி சோதனை செய்தனர். அதில், வீடு கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்கள் இருந்தது. ஆனால், வேனின் உட்புறம் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து சோதனை செய்தனர்.அதில், ரூ. 1.36 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு உள்ளிட்ட போதைப் பொருட்களை பெங்களூருவில் இருந்து அருகேரிக்கு கடத்தி வந்தது தெரிந்தது.விசாரணையில், வேனில் வந்த திட்டக்குடி அடுத்த அருகேரியைச் சேர்ந்த மகேந்திரன், 35, என்பவர் தனது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிந்தது.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, அருகேரி மகேந்திரன், 35; தெய்வமணி, 25; வேன் டிரைவர், திட்டக்குடி ஆரோக்கியசாமி, 38, ஆகியோரை கைது செய்தனர். போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X