சரியான சூழலில் கருத்தரங்குசம்பத் எம்.எல்.ஏ., பாராட்டு

Added : செப் 04, 2022 | |
Advertisement
புதுச்சேரி-பள்ளி ஆசிரியர்களுக்கு மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழுக்கு, சம்பத் எம்.எல்.ஏ., பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கை, தனியார் மருத்துவக் கல்லுாரியுடன் இணைந்து ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழுக்கு எனது மனமார்ந்த பாராட்டும், நன்றியும்.இன்றைய சூழலுக்கு மிகவும்



புதுச்சேரி-பள்ளி ஆசிரியர்களுக்கு மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழுக்கு, சம்பத் எம்.எல்.ஏ., பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கை, தனியார் மருத்துவக் கல்லுாரியுடன் இணைந்து ஏற்பாடு செய்த 'தினமலர்' நாளிதழுக்கு எனது மனமார்ந்த பாராட்டும், நன்றியும்.இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான கருத்தரங்காக இதை நான் பார்க்கிறேன். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதை நன்கு அறிவோம்.கல்வி மட்டுமன்றி, மாணவர்களின் ஒழுக்கம், அறிவு சார்ந்து அவர்கள் முன்னேற ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியம்.இத்தகைய ஆசிரியர் சமூகம் இன்று பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. மாறிவரும் சமூக சூழல் மற்றும் கொரோனா இடைவெளிக்குப்பின் பள்ளி திரும்பிய மாணவர்களிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.மாணவர் - ஆசிரியர் இடையேயான பிணைப்பில் ஏற்பட்ட இடைவெளியால் பல விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சரியான நேரத்தில் இக்கருத்தரங்கை நடத்தியது பாராட்டுக்கு உரியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X