அரசு பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிநாளை வானொலியில் ஒலிபரப்பு

Added : செப் 04, 2022 | |
Advertisement
பாகூர்-புதுச்சேரி வானொலியில், மணப்பட்டு அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின், ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி நாளை 5ம் தேதி ஒலிபரப்பாக உள்ளது.புதுச்சேரி வானொலி நிலையத்தில், ஆசிரியர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக, மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் பங்கேற்று,



பாகூர்-புதுச்சேரி வானொலியில், மணப்பட்டு அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின், ஆசிரியர் தின சிறப்பு நிகழ்ச்சி நாளை 5ம் தேதி ஒலிபரப்பாக உள்ளது.புதுச்சேரி வானொலி நிலையத்தில், ஆசிரியர் தின விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக, மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் பங்கேற்று, ஆசிரியரின் மேன்மை, தேசியக்கொடி, மரம் வளர்ப்போம் இயற்கையை காப்போம், வில்லுப்பாட்டு, நாடகம், ஆங்கில உரையாடல், பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சியை நிகழ்த்தினர்.தமிழாசிரியை சுமதி ராகவன், ஆசிரியர் சசிக்குமார் ஆகியோர் இணைந்து, மாணவர்களுக்கு பயிற்சியளித்து நிகழ்ச்சிக்கு வழி நடத்திச் சென்றனர்.வானொலி நிலைய ஒலிபரப்பு நிர்வாகி ரேவகேஷ்வரி, பள்ளி மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி, நாளை 5ம் தேதி காலை 11.00 மணிக்கு புதுச்சேரி வானொலியில் ஒலிபரப்பாக உள்ளதாக தலைமையாசியர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X