சனீஸ்வரர் கோவில் மேம்பாட்டு பணிகலெக்டர் முகமது மன்சூர் ஆய்வு

Added : செப் 04, 2022 | |
Advertisement
காரைக்கால் -திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மேம்பாட்டுப் பணிகளை கலெக்டர் முகமது மன்சூர் ஆய்வு செய்தார்.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று கலெக்டர் முகம்மது மன்சூர் ஆய்வு மேற்கொண்டார். துணை ஆட்சியர் ஆதர்ஷ், கோவில் நிர்வாக அதிகாரி
சனீஸ்வரர் கோவில் மேம்பாட்டு பணிகலெக்டர் முகமது மன்சூர் ஆய்வு



காரைக்கால் -திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மேம்பாட்டுப் பணிகளை கலெக்டர் முகமது மன்சூர் ஆய்வு செய்தார்.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று கலெக்டர் முகம்மது மன்சூர் ஆய்வு மேற்கொண்டார். துணை ஆட்சியர் ஆதர்ஷ், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், கோவில் அதிகாரி சீனிவாசன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.கோவில் நகரத்திட்டத்தின் கீழ் நடைபெறும் கியூ காம்ப்ளக்ஸ் கட்டுமானப் பணி, பக்தர்கள் ஓய்வெடுக்கும் வளாகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், இரவு தங்கும் விடுதி, திருமண மண்டபம் ஆகிய கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஹெலிபேட் வளாகத்தை பார்வையிட்டு, அப்பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X