வன விலங்குகள் தாக்குதல் 7 ஆண்டுகளில் 52 பேர் பலி

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பந்தலுார் : கூடலுார் வனக்கோட்டத்தில், ஏழு ஆண்டுகளில், 52 பேர் வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டம், தமிழகம் -- கேரளா -- கர்நாடக மாநில வனப்பகுதிகள் சந்திக்கும் இடமாகவும், வனவிலங்குகளின் வலசை பாதைகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது.இங்கு, பாட்டவயல் முதல் அய்யன்கொல்லி வரை, 700 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதிகள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன.
வன விலங்குகள், தாக்குதல், வலசை, யானை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


பந்தலுார் : கூடலுார் வனக்கோட்டத்தில், ஏழு ஆண்டுகளில், 52 பேர் வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டம், தமிழகம் -- கேரளா -- கர்நாடக மாநில வனப்பகுதிகள் சந்திக்கும் இடமாகவும், வனவிலங்குகளின் வலசை பாதைகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இங்கு, பாட்டவயல் முதல் அய்யன்கொல்லி வரை, 700 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதிகள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகம் பென்னை வனத்தை ஒட்டிய அரசு நிலம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.மூன்று மாநிலங்களின் யானைகள் வந்து செல்லும் ஓவேலி பகுதியிலும் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன.


latest tamil news


மேலும், இங்கு மின்வேலிகள் அமைக்கப்பட்டு, யானை வழித்தடங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்கு மனித மோதல் அதிகரித்துள்ளது.கடந்த, 2015 முதல் இதுவரை, கூடலுார் வனக்கோட்டத்தில், வனவிலங்குகள் தாக்குதலில், 52 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் எனக் குமுறும் அப்பகுதி மக்கள், வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி நிரந்தர தீர்வு காண வலியுறுத்துகின்றனர்.

உலகளாவிய காணுயிர்களுக்கான நிதியக பொறுப்பாளர் பூமிநாதன் கூறுகையில், ''வனவிலங்கு, மனித மோதல் ஏற்படும் நேரங்களில், அந்த இடங்களின் தன்மை, விபத்துக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் முழுமையான தெளிவுபடுத்த வேண்டும்.அப்பகுதியில் ஆய்வு செய்து பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-செப்-202210:37:01 IST Report Abuse
Lion Drsekar மனம் வேதனை அடைகிறது. ஆனால் சமூக விரோதிகளால் நடத்தப்படும் கொலைகள் பல ஆயிரம், வன விலங்குகளுக்கும் சமூக விரோதிகளும் உள்ள வேறுபாட்டைப் பார்த்தல் வனவிலங்குகள் மனிதனைவிட நல்லவர்களாக இருக்கிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-செப்-202209:30:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் In Tamil Nadu, over 500 elephants have died due to various causes since 2015 as per data from an RTI. As per another news, 416 wild elephants died in Kerala since 2015. In Karnataka just in one year (2021), 70 elephants have died. Even at a conservative estimate, total deaths in 7 years since 2015 is 490. So, in the same forests, over 1,500 elephants have been killed / died over 7 years.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-செப்-202206:02:32 IST Report Abuse
Kasimani Baskaran காடுகளை அழித்தால் வனவிலங்குகள் நாட்டுக்குள்த்தான் வரும்.
Rate this:
04-செப்-202210:02:48 IST Report Abuse
மதுமிதாSuper...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X