அரசு உதவித்தொகை நிலுவை இயக்குனருடன் எம்.எல்.ஏ., ஆலோசனை| Dinamalar

அரசு உதவித்தொகை நிலுவை இயக்குனருடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

Added : செப் 04, 2022 | |
புதுச்சேரி-உருளையன்பேட்டை தொகுதியில் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை நிலுவையில் உள்ளது குறித்து, துறை இயக்குனரை, நேரு எம்.எல்.ஏ., சந்தித்து ஆலோசனை செய்தார்.உருளையன்பேட்டை தொகுதியில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி, திருநங்கை, திருமணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட, அரசு உதவித்தொகை பயனாளிகள் பலருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை
அரசு உதவித்தொகை நிலுவை இயக்குனருடன் எம்.எல்.ஏ., ஆலோசனை



புதுச்சேரி-உருளையன்பேட்டை தொகுதியில் பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை நிலுவையில் உள்ளது குறித்து, துறை இயக்குனரை, நேரு எம்.எல்.ஏ., சந்தித்து ஆலோசனை செய்தார்.உருளையன்பேட்டை தொகுதியில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி, திருநங்கை, திருமணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட, அரசு உதவித்தொகை பயனாளிகள் பலருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை சம்பந்தமாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனாவை, நேரு எம்.எல்.ஏ., சந்தித்துப் பேசினார்.அப்போது, உருளையன்பேட்டை தொகுதியில் பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள அரசின் உதவிதொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக துறை இயக்குனர் முத்துமீனா தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X