தனியார் பஸ் மோதி பசுமாடு பலி; நிவாரணம் கோரி சாலை மறியல்

Added : செப் 04, 2022 | |
Advertisement
திருபுவனை-மதகடிப்பட்டு அருகே தனியார் பஸ் மோதி பசுமாடு பலியானது. நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம், திருக்கனுார் சாலையில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன், இவரது மனைவி மலர். இவர்கள் நான்கு பசு மாடுகளை வளர்த்து வந்தனர்.நேற்று காலை 8.45 மணியளவில் மாடுகளை வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக மலர் ஓட்டிச்
தனியார் பஸ் மோதி பசுமாடு பலி; நிவாரணம் கோரி சாலை மறியல்



திருபுவனை-மதகடிப்பட்டு அருகே தனியார் பஸ் மோதி பசுமாடு பலியானது. நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம், திருக்கனுார் சாலையில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன், இவரது மனைவி மலர். இவர்கள் நான்கு பசு மாடுகளை வளர்த்து வந்தனர்.நேற்று காலை 8.45 மணியளவில் மாடுகளை வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக மலர் ஓட்டிச் சென்றார்.அப்போது திருக்கனுாரில் இருந்து மதகடிப்பட்டு நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. அதையடுத்து பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.விபத்தினால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், திருக்கனுார் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது.சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.மாட்டின் உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.இதையடுத்து காலை 9.45 மணிக்கு மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மதகடிப்பட்டு- திருக்கனுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X