நகர வாழ்வாதார மையம் சார்பில்போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : செப் 04, 2022 | |
Advertisement
புதுச்சேரி-உழவர்கரை நகராட்சியின் நகர வாழ்வாதார மையம் சார்பில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உழவர்கரை நகராட்சியின் நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் இணைந்து, அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மற்றும் திறன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.நகர்ப்புற ஏழை மாணவர்களுக்காக,



புதுச்சேரி-உழவர்கரை நகராட்சியின் நகர வாழ்வாதார மையம் சார்பில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உழவர்கரை நகராட்சியின் நகர வாழ்வாதார மையம், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் இணைந்து, அரசு போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மற்றும் திறன் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.நகர்ப்புற ஏழை மாணவர்களுக்காக, சுயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் மூலம் கொட்டுப்பாளையம், நகர வாழ்வாதார மையத்தில் இந்த பயிற்சி நடக்கிறது.நேற்று இப்பயிற்சி வகுப்பில் கலெக்டர் வல்லவன் பங்கேற்று, மாணவர்களுக்கு மொபைல் பயிற்சி செயலியை வழங்கி சிறப்புரையாற்றினார். உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் பயிற்சி சிறப்புகள் பற்றி கூறினார்.ஏற்பாடுகளை உதவி திட்ட அதிகாரி சிவக்குமார், நிர்வாகிகள் மோகன், வைத்தி, நவயுகா கன்சல்டன்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் ஆகியோர் செய்தனர்.பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், மொபைல் எண்கள் 98436 12714, 98436 15909 ஆகியவற்றிலும், nclcskill@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X