குளூனி பள்ளியில் விளையாட்டு தின விழா

Added : செப் 04, 2022 | |
Advertisement
புதுச்சேரி-வில்லியனுார், ஒதியம் பட்டு புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் ஆண்டு விளையாட்டு தின விழா, 'வளங்குன்றா வளர்ச்சி இலக்கு' என்ற தலைப்பில் நேற்று நடந்தது.பள்ளி மாணவியர் தலைவி தனுஜா வரவேற்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, புனித சூசையப்பர் சபையின் தென் கிழக்கு மாகாணத்தின் தலைவி அருட்சகோதரி லொரைன்
குளூனி பள்ளியில் விளையாட்டு தின விழா



புதுச்சேரி-வில்லியனுார், ஒதியம் பட்டு புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் ஆண்டு விளையாட்டு தின விழா, 'வளங்குன்றா வளர்ச்சி இலக்கு' என்ற தலைப்பில் நேற்று நடந்தது.பள்ளி மாணவியர் தலைவி தனுஜா வரவேற்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, புனித சூசையப்பர் சபையின் தென் கிழக்கு மாகாணத்தின் தலைவி அருட்சகோதரி லொரைன் பின்டோ, பள்ளி தாளாளர் அருட்சகோதரி எமிலியானா, பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜெய்ஸ் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.'வளங்குன்றா வளர்ச்சி இலக்குகள்' என்ற கருப்பொருளை பின்பற்றி 1,734 மாணவிகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் உடற் பயிற்சிகளில் பங்கேற்றனர்.இரண்டாம் வகுப்பு மாணவிகள் சிறப்பு விருந்தினர்களை மலர் வளையங்களுடன் வரவேற்றனர்.அமைச்சர் நமச்சிவாயம் தேசியக் கொடியை ஏற்றி, 9,10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.யுனெஸ்கோவின் 13 நாடுகளின் உடையை மாணவிகள் அணிந்து, அந்நாட்டு கொடிகளுடன் ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். மைதானத்திற்குள் ஒட்டகமும் உலா வந்து, பார்வையாளர்களை கவர்ந்தது.ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவிகள் பாலின சமத்துவம் என்ற இலக்கையும், சமமின்மையை குறைத்தல் என்ற மற்றொரு இலக்கையும் மையப்படுத்தி, அதன் சின்னத்தை அழகாக வடிவமைத்து அசத்தினர்.மூன்றாம் வகுப்பு மாணவியர் பொறுப்பான நுகர்வு, உற்பத்தி, சுத்தமான நீர், சுகாதாரம் ஆகிய இலக்குகளை மையப்படுத்தி நினைவு சின்னத்தை வடிவமைத்து, பாராட்டை பெற்றனர்.நான்காம் வகுப்பு மாணவியர் கடல் வளத்தை பற்றியும், ஐந்தாம் வகுப்பு மாணவியர் நிலையான நகரங்கள் பற்றியும் சின்னங் களை வடிவமைத்து கைத்தட்டல் பெற்றனர்.வறுமையின்மை, தொழில் கண்டுபிடிப்பு, உட்கட்டமைப்பு இலக்குகளை மைதானத்தில் வடிவமைத்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X