டூவீலரை லோடு வண்டியாக மாற்றிய மேலுார் மாணவர்

Added : செப் 04, 2022 | |
Advertisement
மேலுார் : இருவர் பயணிக்கும் டூவீலரின் பின்புறத்தில்டிரைசைக்கிளை இணைத்து 200 கிலோ வரை சரக்குகளை கொண்டு செல்லும் மாணவரின் கண்டுபிடிப்பு பொதுமக்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மேலுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ் சுப்பிரமணியம் 14, ஆர்.வி. பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயது முதல் கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் உள்ளவர். தற்போது டூவீலரின் பின்புறத்தில் சரக்குகளை
டூவீலரை லோடு வண்டியாக மாற்றிய மேலுார் மாணவர்



மேலுார் : இருவர் பயணிக்கும் டூவீலரின் பின்புறத்தில்டிரைசைக்கிளை இணைத்து 200 கிலோ வரை சரக்குகளை கொண்டு செல்லும் மாணவரின் கண்டுபிடிப்பு பொதுமக்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.மேலுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ் சுப்பிரமணியம் 14, ஆர்.வி. பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயது முதல் கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் உள்ளவர். தற்போது டூவீலரின் பின்புறத்தில் சரக்குகளை ஏற்றுவதற்கு வசதியாக டிரை சைக்கிளை வடிவமைத்துஉள்ளார்.சந்தோஷ் சுப்பிரமணியம் கூறியதாவது: விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை தங்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்ல வாடகை வேன் பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இச் சிரமத்தை போக்க ஒரு டூவீலரில் இருவர் பயணிக்கும் அதே வேளை, அதன் பின்புறத்தில் தேவைக்கேற்ப கழற்றி மாற்றும்வகையில், கிளாம்ப் மூலம் அதில் டிரை சைக்கிளை இணைத்துஉள்ளேன்.இவ்வண்டியில் 300 கிலோ வரை ஏற்றிச் செல்லலாம். டூவீலரை ஓட்டுவதற்கும் சிரமம் இருக்காது.இதனால் நேரம் மற்றும் பணம் மிச்சமாகிறது. விவசாயிகள், வியாபாரிகளுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும், என்றார். மாணவர் சந்தோஷ் சுப்பிரமணியத்தை 99444 37098ல் பாராட்டலாம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X