தொடர் மழையால் உச்சம் தொட்டது விலை; மதுரையில் கிலோ ரூ.2,300க்கு விற்பனை

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மல்லிகைப் பூக்களின் விலை திடீரென அதிகரித்து, நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ. 2300 க்கு விற்பனையானது.ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் ஆடி மாதத்தில் மல்லிகைச்செடிகள் அனைத்தும் அதிகளவில் பூத்தன. வரத்து அதிகரித்ததால் மல்லிகை விலை குறைந்து கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டது. ஆவணியில் பூ வரத்து குறைந்ததால் விலை
 தொடர் மழையால் உச்சம் தொட்டது விலை;  மதுரையில் கிலோ ரூ.2,300க்கு விற்பனை


மதுரை : மதுரை வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மல்லிகைப் பூக்களின் விலை திடீரென அதிகரித்து, நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ. 2300 க்கு விற்பனையானது.ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் ஆடி மாதத்தில் மல்லிகைச்செடிகள் அனைத்தும் அதிகளவில் பூத்தன. வரத்து அதிகரித்ததால் மல்லிகை விலை குறைந்து கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டது.

ஆவணியில் பூ வரத்து குறைந்ததால் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியது.மூன்று நாட்களாக கிலோ ரூ.1500 வரை சென்ற மல்லிகைப் பூக்கள் தரம்வாரியாக ரூ.1500 முதல் ரூ.1800 வரை விற்கப்பட்டது. சென்ட் தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக கிலோ ரூ.70க்கு மேல் வாங்கியதில்லை.

தற்போது கிலோவுக்கு ரூ.250 விலை நிர்ணயித்ததால் மல்லிகை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நேற்றும் வரத்து குறைந்த நிலையில் மல்லிகை கிலோ ரூ.2300க்கு விற்பனையானது. நேற்று முகூர்த்த தினமாக இல்லாத நிலையிலும் விலை உச்சத்தால் சில்லறை விற்பனையாளர்கள் மல்லிகையை வாங்காமல் தவிர்த்தனர்.

பூக்களை மாலையாக கட்டி விற்போரும் நேற்று மல்லிகையை வாங்கவில்லை.பிச்சி, முல்லைப் பூக்களும் வழக்கமாக மல்லிகை அளவு விலைக்கே விற்பனையாகும். ஆனால் மழையால் இப்பூக்களின் உற்பத்தி பாதிக்காததால் வரத்து அதிகரித்து கிலோ ரூ.500க்கு விற்பனையானது. சம்பங்கி கிலோ ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.250, அரளிப்பூ ரூ.300க்கு விற்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X