வேளாண் உற்பத்தி: ஆணையர் ஆய்வு

Added : செப் 04, 2022 | |
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தில் தோட்டக் கலைத் துறை மூலம் மகளிருக்கான தொழில் முனைவோர் உருவாக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் காளான் குடில். ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 334
வேளாண் உற்பத்தி: ஆணையர் ஆய்வு



திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குனர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.குமாரமங்கலம் கிராமத்தில் தோட்டக் கலைத் துறை மூலம் மகளிருக்கான தொழில் முனைவோர் உருவாக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் காளான் குடில். ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 334 ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கொய்யாவில் நுண்ணீர் பாசன முறை மேற்கொள்ளப்படுகிறது.இதனை வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி மற்றும் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விவசாயிகளிடம் கொய்யா சந்தைப்படுத்துதல். பதப்படுத்துதல், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தல். இயற்கை முறையில் பூச்சி நோய் மேலாண்மை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனை வழங்கினர்.திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, தோட்டக்கலைத் துறை இயக்குனர் அன்பழகன், வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம், துணை இயக்குநர்கள் பெரியசாமி, செல்வபாண்டியன், தோட்டக்கலை இயக்குனர்கள் சுரேஷ், ராஜ்குமார், ஜெய்சன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X