பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு| Dinamalar

பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Added : செப் 04, 2022 | |
கள்ளக்குறிச்சி,-அம்மகளத்துாரில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி தனலட்சுமி, 45; இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த 1ம் தேதி தனலட்சுமியை அவரது உறவினர் கந்தசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் ஆபாசமாக பேசியுள்ளார்.இது குறித்து கேட்டபோது



கள்ளக்குறிச்சி,-அம்மகளத்துாரில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி தனலட்சுமி, 45; இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த 1ம் தேதி தனலட்சுமியை அவரது உறவினர் கந்தசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் ஆபாசமாக பேசியுள்ளார்.இது குறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் தனபாக்கியம் மற்றும் அவரது கணவர், மகன் சேர்ந்து தனலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், கந்தசாமி, இவரது மனைவி தனபாக்கியம், மகன் பிரபாகரன், ஆகிய 3 பேர் மீதும் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X