பாம்புகளின் கூடாரமாக மாறிய டாக்டர் குடியிருப்பு| Dinamalar

பாம்புகளின் கூடாரமாக மாறிய டாக்டர் குடியிருப்பு

Added : செப் 04, 2022 | |
மேலுார் : மேலூர், தும்பை பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குடியிருப்பில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளதால் பாம்புகளின் கூடாரமாக மாறியுள்ளது.இவ்வூராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கம்பட்டி அட்டப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பணிபுரியும் டாக்டர் தங்குவதற்கான குடியிருப்பு சிதிலமடைந்துள்ளது.சமூக
பாம்புகளின் கூடாரமாக  மாறிய டாக்டர் குடியிருப்பு


மேலுார் : மேலூர், தும்பை பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குடியிருப்பில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளதால் பாம்புகளின் கூடாரமாக மாறியுள்ளது.இவ்வூராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கம்பட்டி அட்டப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பணிபுரியும் டாக்டர் தங்குவதற்கான குடியிருப்பு சிதிலமடைந்துள்ளது.சமூக ஆர்வலர் ராஜேஸ்வரன் கூறியதாவது: செவ்வாய் கிழமை கர்ப்பிணி பெண்களும், வியாழக்கிழமைகளில் சக்கரை மற்றும் இரத்த அழுத்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் என ஐநுாறுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க தலா ஒரு டாக்டர், செவிலியர், லேப் டெக்னிசியன் மட்டுமே உள்ளனர்.இச்சுகாதார நிலையம் அருகிலுள்ள டாக்டர் குடியிருப்பு போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துஉள்ளது. இதனால்அப்பகுதி புதர் மண்டி பாம்புகளின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே, நோயாளிகளின் நலன் கருதி கூடுதலாக மற்றொரு டாக்டரை நியமிப்பதோடு, குடியிருப்பை பராமரித்து டாக்டர் தங்குவதற்கான வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X