செப்.27 தபால்துறை குறைதீர் கூட்டம்| Dinamalar

செப்.27 தபால்துறை குறைதீர் கூட்டம்

Added : செப் 04, 2022 | |
மதுரை : மதுரை பீபிகுளம் மண்டல அலுவலகத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் செப்.27, காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கான புகார் மனுக்களை செப்.14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.தபால் அனுப்பிய தேதி, பணவிடை, துரித தபால், பதிவு தபால் உள்ளிட்ட விவரங்கள், காப்பீடு சம்பந்தமானது எனில், பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம்,கடித தொடர்புகள் இருப்பின் இணைக்க



மதுரை : மதுரை பீபிகுளம் மண்டல அலுவலகத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் செப்.27, காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கான புகார் மனுக்களை செப்.14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.தபால் அனுப்பிய தேதி, பணவிடை, துரித தபால், பதிவு தபால் உள்ளிட்ட விவரங்கள், காப்பீடு சம்பந்தமானது எனில், பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம்,கடித தொடர்புகள் இருப்பின் இணைக்க வேண்டும். தனியார் கூரியரில் அனுப்பக் கூடாது.குறைகளை, 'தபால் சேவை குறைதீர்க்கும் முகாம், ஜெ.பிரதீப்குமார், உதவி இயக்குனர், தபால் துறை தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை- 625 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தபால் உறையின் மீது 'தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- செப்.2022' என குறிப்பிடவேண்டும் என, உதவி இயக்குனர் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X