ஓட்டுக்காக வேல் ஏந்தியவர் ஸ்டாலின்; சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (93) | |
Advertisement
திருப்பூர்: ''தேர்தல் பயத்தில் ஓட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் வேல் ஏந்தினார்,'' என, திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.திருப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூர் நலனை கருத்தில் கொண்டு, 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நடந்துவரும் நிலையில், இது தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக

திருப்பூர்: ''தேர்தல் பயத்தில் ஓட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் வேல் ஏந்தினார்,'' என, திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.



latest tamil news




திருப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் நலனை கருத்தில் கொண்டு, 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நடந்துவரும் நிலையில், இது தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தமிழக முதல்வர் அனைவருக்கும் சொந்தமானவர். தி.மு.க., தலைவராக அவர் எப்படி வேண்டுமானால் இருந்து கொள்ளலாம்.

மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை பரிமாறுகிறார். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாததை பற்றி, முதல்வரிடம் மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தலுக்கு முன்பு, வெற்றிவேல் யாத்திரை எனது தலைமையில் நடந்தது. ஆனால், ஸ்டாலின் தேர்தல் பயத்தில் வேலை ஏந்தி வெளியில் வந்தார்.

ஓட்டுக்காக அன்றைக்கு செய்து விட்டு, இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்ற வேண்டும். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட்டுக்கு 'திருப்பூர் குமரன்' பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். ராகுல் நடைபயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பரந்து விரிந்துள்ளது. அதை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news





உறுதுணையாக!



முன்னதாக, திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் தொழிற்துறையினர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன்,''இந்தியாவின் பொருளாதாரத்தில் திருப்பூர் முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கிருந்து பலர் ஒட்டுமொத்த பின்னலாடை தொழில் சார்ந்த பிரச்னைகளுக்காக மட்டும் டில்லி வருகின்றனர்; இது ஆச்சரியம் அளிக்கிறது. தொழில்துறையினருக்கு எப்போதும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். வரும், 2047ம் ஆண்டு நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும்,'' என்றார்.


முதல்வரிடம் ஏமாற்றம்



தொழில் துறையினர் சந்திப்பு கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் பேசுகையில், ''தொழில்துறையை சந்தித்து குறைகளை கேட்பதற்கு நன்றி தெரிவிக்கிறோம். தமிழக முதல்வர் திருப்பூர் வந்தபோது, 18 மணி நேரம் இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொழில் துறையினரை சந்தித்து கலந்துரையாடவில்லை. அவரை சந்திக்க இருந்தோம்; பெரிய ஏமாற்றமாகி விட்டது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
05-செப்-202207:00:20 IST Report Abuse
Muguntharajan நீ ஓட்டுக்காக வேல் தூக்கலையா?
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
04-செப்-202220:11:28 IST Report Abuse
சாண்டில்யன் இவங்கல்லாம் வாழ்த்தினா மக்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்களாம் . சொல்லிட்டா பூத்து போயிடுவாங்கலாம்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
04-செப்-202219:19:40 IST Report Abuse
Tamilan , முதல்வர் அரசியல் செய்வதில்லை. தேர்தலுக்கு முன் கட்சித்தலைவர் அரசியல் செய்தார்,எங்கும் அரசியல் எதிலும் அரசியல் செய்யவில்லை முதல்வர் என்றுதான் இவர் கூறுகிறார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X