அமிர்தா ரயிலை கோவைக்கு நீட்டித்தால் கூடுதல் வருவாய்!

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
கூடுதல் வருவாய்க்காக கோவையிலிருந்து நான்கு ரயில்களை கேரளாவுக்கு நீட்டித்துள்ள தெற்கு ரயில்வே, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை கோவைக்கு நீட்டித்து, கூடுதல் வருவாயை பெருக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், அதிக வருவாய் தரும் ஸ்டேஷன்கள் பட்டியலில் கோவை சந்திப்பு மூன்றாமிடத்திலும், சேலம் கோட்டம் முதலிடத்திலும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கூடுதல் வருவாய்க்காக கோவையிலிருந்து நான்கு ரயில்களை கேரளாவுக்கு நீட்டித்துள்ள தெற்கு ரயில்வே, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை கோவைக்கு நீட்டித்து, கூடுதல் வருவாயை பெருக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.latest tamil news
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், அதிக வருவாய் தரும் ஸ்டேஷன்கள் பட்டியலில் கோவை சந்திப்பு மூன்றாமிடத்திலும், சேலம் கோட்டம் முதலிடத்திலும் உள்ளது. கோவையிலிருந்தும், கோவை வழியாகவும் கூடுதல் ரயில்களை இயக்கினால், இந்த வருவாய் இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாறாக, கோவையிலிருந்து இயங்கும் ரயில்களை, கேரளாவுக்கு நீட்டிக்கும் போக்கு சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.


கேரளாவுக்கு பயன்


சென்னை எழும்பூரிலிருந்து ஈரோடு வழியாக கோவைக்கு வரும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மக்களுக்கு பயனளிக்கும் வகையில், கர்நாடகாவின் மங்களூரு வரை நீட்டிக்கப்பட்டது. திருச்சியிலிருந்து கோவைக்கு இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், இப்போது பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மக்களுக்கு பெரிதும் பயனளித்து வந்த கோவை-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலையும் எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர்.


நடக்கவில்லை


இந்த ரயில், கோவைக்கு வந்து இங்கிருந்து ஆர்.எஸ்.ஏ., எனப்படும் பெட்டிகளை பகிரும் முறையில், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலாக சென்னைக்கு இயக்கப்பட்டது. அப்போது சென்னைக்கு இரவு, 9:00 மணிக்கு சென்றதால், பெரிதும் பயனளித்தது. அதையும் எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டதால், இப்போது சென்னைக்கு இரவு, 11:00க்கு செல்கிறது. இதற்கு பதிலாக, அமிர்தா ரயிலை கோவைக்கு நீட்டிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது; அது இன்று வரை நடக்கவில்லை.


குதிரை கொம்பு


கோவையிலுள்ள கேரள மக்கள், ஒரே இரவில் எர்ணாகுளம் செல்ல உதவியாக இருந்த மேட்டுப்பாளையம்-கொச்சி துறைமுக முனையம் வரை இயக்கப்பட்ட ரயில், காரைக்கால் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் உட்பட கோவையிலிருந்து மற்ற நகரங்களுக்கு இணைக்கப்பட்ட அனைத்து ரயில்களிலுமே, கோவை மக்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாகத்தான் உள்ளது.

கூடுதல் வருவாய் மற்றும் ரயில் பயன்பாடு அதிகரிப்பு ஆகிய காரணங்களை கூறியே, இந்த ரயில்கள் நீட்டிக்கப்படுகின்றன. ஆனால், அதே காரணத்தை வைத்து, தமிழக பகுதிகளுக்கு குறிப்பாக கோவைக்கு ரயிலை நீட்டிக்க கோரினால், அதை ரயில்வே அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை.


latest tamil news

அமிர்தா எக்ஸ்பிரஸ் அன்றும் இன்றும்!


இந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2001ல், பா.ஜ., ஆட்சியின்போது, அப்போதைய மத்திய அமைச்சர் ராஜகோபால் முயற்சியால், அறிமுகப்படுத்தப்பட்டு, கேரளாவின் ஆன்மிக அடையாளமாக விளங்கும் மாதா அமிர்தானந்த மயி பெயரும் சூட்டப்பட்டது. முதலில், திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை இயக்கப்பட்ட இந்த ரயில், பின்பு பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டது; அதன்பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டு மதுரை வரை இயக்கப்படுகிறது.

இந்த ரயிலை, பாலக்காட்டிலிருந்து கோவைக்கு இரு திசைகளிலும் திருப்பி விட்டால், தற்போதுள்ள பயணிகளுடன் தினமும் கூடுதலாக ஆயிரம் பேர் வரை பயணம் செய்ய முடியும். கூடுதலாக, 40 கி.மீ.,துாரம் மட்டுமே செல்ல வேண்டியிருப்பதால், அதிக நேரமும் எடுக்காது. அவ்வாறு இயக்கினால், திருவனந்தபுரம் மற்றும் தெற்கு கேரளாவிலிருந்து, இரவோடு இரவாக கோவை வர இயலும். இங்குள்ள கேரள மக்களும் அங்கு நேரடியாக செல்ல முடியும்.


குரல் கொடுக்கணும்!


கோவை மக்கள், பழநி, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்வதற்கு, மற்றுமோர் ரயில் வசதியும் கிடைக்கும். இந்த ரயிலுக்கு மாதத்துக்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும். எனவே, கோவையிலிருந்கு நான்கு ரயில்களை, வேறு நகரங்களுக்கு 'நகர்த்திக்' கொண்டு போன தெற்கு ரயில்வே, இந்த ஒரு ரயிலையாவது கோவைக்கு நீட்டிக்க வேண்டும். இதற்கு கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் எம்.பி.,க்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V GOPALAN - chennai,இந்தியா
04-செப்-202220:31:23 IST Report Abuse
V GOPALAN Majority in Tamilnadu is Malayalee only that is why Stalin likes visiting Kerala frequently. DMK Benamies are Kerala Muslims only
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-செப்-202217:40:25 IST Report Abuse
r.sundaram இது விஷயமாக நமது எம் பிக்கள் பாராளுமன்றத்தில் ஏன் பேச பயப்படுகிறார்கள்? ஹிந்தி தெரியாது, ஆங்கிலம் வராது என்பதாலா? தமிழக கல்வியின் தரம் என்ன என்பது இப்போது புரிகிறதா?
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
04-செப்-202216:52:36 IST Report Abuse
Yogeshananda இதைப் பற்றி 39 எம்பிக்கள் பாராளுமன்றத்தில் வாயை திறக்க மாட்டானுக.... திருட்டுப் பயலுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X