பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

Added : செப் 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதிய அறிவியல் சாதனங்கள், தகவல் தொடர்பு வசதிகள், பெண்கள் கல்வி கற்கும் வசதி இல்லாத காலங்களில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு



ஸ்ரீவில்லிபுத்துார் : மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதிய அறிவியல் சாதனங்கள், தகவல் தொடர்பு வசதிகள், பெண்கள் கல்வி கற்கும் வசதி இல்லாத காலங்களில் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று பெண்கள் உயர்கல்வி பெறும் சூழலிலும், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும் சிறு பெண் குழந்தைகள் கூட பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.இதற்கு தவறாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகளும் ஒரு காரணம். கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கிய பிறகு, தற்போது அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவாகிறது.நகர் பகுதி போலீஸ் ஸ்டேஷன்கள் மட்டுமின்றி கிராமப்புற போலீஸ் ஸ்டேஷன்களிலும் மாதம் ஒரு வழக்காவது பதிவாகும் நிலை காணப்படுகிறது.

பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் மாணவிகள், கல்லூரி படிப்பை முடிக்காத மாணவிகள், 18 வயதுக்கு கீழான சிறுமதிகள் ஆகியோர் எதிர்கால சிந்தனை இன்றி காதல் வயப்பட்டு பெற்றோரை மறந்து வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.இப்போது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதியில் தனியார் நிறுவனங்களில் அதிகளவில் வட மாநில இளைஞர்கள் பணியாற்றும் சூழலில், அங்கு பணியாற்றும் திருமணமாகாத பெண்களும் காதல் வயப்பட்டு, மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் பெண்கள் மிஸ்ஸிங் வழக்குகள் பதிவாகி வருகிறது.

வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த மைனர் பெண்கள் கர்ப்பமடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் போது, உண்மை வெளிப்பட்டு போக்சோ வழக்கில் கணவர் கைது செய்யப்படுகிறார். இதனால் அப்பெண்ணின் எதிர்கால வாழ்க்கை சூழல் கேள்விக்குறியாகிறது.எனவே, மாவட்டத்தில் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமங்களில் கூட பாலியல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தீவிரமாக ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
04-செப்-202208:34:31 IST Report Abuse
GMM தனியார் நிறுவனங்கள்/கல்லூரிகள் ஒழுக்கமான ஊழியர்கள்/ மாணவர்கள் தேர்வு செய்ய கடமை பட்டவர்கள். ஊழியர்/மாணவர் குடும்ப புகைப்படம் கட்டாயம் ஆக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் ஒழுக்கம் இல்லாத ஊழியரை பணி நீக்கம் செய்ய முழு அதிகாரம் இருக்க வேண்டும். புலனாய்வு இதழ் தவறான செய்தி வெளியிடுவது தடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் தன் யூக அதிகாரம் பொது இடங்களில் தான் செலுத்த முடியும்.? மேலும் பெற்றோர்கள் ஒப்புதல் இன்றி திருமணம் அங்கீகாரம் பெற கூடாது. (எந்த வழக்காக இருந்தாலும்) பாலியல் வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்க்க / விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
04-செப்-202208:28:20 IST Report Abuse
Barakat Ali காரணம் என்ன ? அசிங்கம் புடிச்ச .....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
04-செப்-202214:04:35 IST Report Abuse
Barakat Aliஈரவெங்காயத்தின் கலாச்சாரம் .........
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
04-செப்-202207:34:13 IST Report Abuse
duruvasar முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது எல்லோருக்குமான அரசு என பெருமைப்பட சொன்னபோது பாஸிச பிற்போக்கு சக்திகள் இவரை கிண்டல் செய்தார்கள். இப்போது விடை கிடைத்து விட்டதல்வா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X