அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு

Added : செப் 04, 2022 | |
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரிகளில் ஏப்ரல் 2022ல் நடைபெற்ற இறுதி பருவ முறை தேர்வுகளில் இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக பட்டம் பெறவும், உயர் கல்வி பெறவும் வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் சிறப்பு துணைத் தேர்வு செப். 26 மற்றும் 27-ல் அந்தந்த கல்லூரிகளில் நடைபெற உள்ளது.தேர்விற்கான விண்ணப்பத்தை பல்கலை., இணைய தளத்திலிருந்து



காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு கல்லூரிகளில் ஏப்ரல் 2022ல் நடைபெற்ற இறுதி பருவ முறை தேர்வுகளில் இரண்டு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக பட்டம் பெறவும், உயர் கல்வி பெறவும் வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் சிறப்பு துணைத் தேர்வு செப். 26 மற்றும் 27-ல் அந்தந்த கல்லூரிகளில் நடைபெற உள்ளது.தேர்விற்கான விண்ணப்பத்தை பல்கலை., இணைய தளத்திலிருந்து www.alagappauniversity.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தாள் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் வங்கி வரைவோலையை பதிவாளர், அழகப்பா பல்கலை., காரைக்குடி என்ற பெயரில் இணைத்து செப்.10க்குள் தேர்வு பிரிவிற்கு அனுப்ப வேண்டும்.பல்கலை., இணைப்பு கல்லூரிகளில் ஏப்ரல் 2022ல் நடைபெற்ற தேர்வில் மறுமதிப்பீட்டு முடிவுகள் செய்தித்தாள் வாயிலாகவும் பல்கலை., இணையத்திலும் வெளியிடப்பட உள்ளது.

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இம்மறுமதிப்பீட்டின் அடிப்படையில் சிறப்பு துணைத் தேர்வுக்கு தகுதி பெறும் மாணவர்கள் இச்சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மறு மதிப்பீட்டு தேர்வு முடிவு வெளியான மூன்று நாட்களுக்குள் காரைக்குடி அழகப்பா பல்கலை., தேர்வு பிரிவில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுக்குஉரிய நுழைவுச்சீட்டினை அந்தந்த கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தேர்வாணையர் எ.கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X