மனப்பாடம் அல்ல அனுபவித்து உணரும் திறனே அறிவியல் ஆய்வில் முத்திரை பதித்த மாணவர்கள்

Added : செப் 04, 2022 | |
Advertisement
சின்னாளபட்டி : அறிவியல் கண்காட்சி காண்போரின் கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமின்றி கருத்து செறிவினை எளிதாக உணர்த்தும் ஓர் அரிய வாய்ப்பு. அந்த வகையில் திண்டுக்கல் லக்சர்வேர்ல்டு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இளம் அறிவியல் துறை ஆய்வாளர்களை உருவாக்கும் விதமாக மாணவர்களின் நேரடி செய்முறை பயிற்சி, சுய கற்பனை வளம், உருவாக்கும்சின்னாளபட்டி : அறிவியல் கண்காட்சி காண்போரின் கண்களுக்கு விருந்தளிப்பது மட்டுமின்றி கருத்து செறிவினை எளிதாக உணர்த்தும் ஓர் அரிய வாய்ப்பு. அந்த வகையில் திண்டுக்கல் லக்சர்வேர்ல்டு பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி முற்றிலும் வேறுபட்டு இருந்தது. இளம் அறிவியல் துறை ஆய்வாளர்களை உருவாக்கும் விதமாக மாணவர்களின் நேரடி செய்முறை பயிற்சி, சுய கற்பனை வளம், உருவாக்கும் திறன், பிரச்னைகளை எதிர் கொள்ளுதல், ஆய்வின் முடிவுகளை வகைப்படுத்துதல், வரைபட மாதிரிகள் மூலம் விளக்குதல் என பட்டையை கிளப்பி இருந்தனர் மாணவர்கள்.அறிவியல் கருத்துக்கள், தத்துவங்கள், பொது விதிகளை அடிப்படையாக கொண்டு, மாணவர்களின் அறிவு,செயல் திறனை வெளிப்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்க வாய்ப்பளிப்பதாக அமைந்திருந்தது இக்கண்காட்சி . வேதியியல், உயிரியல், இயற்பியல், பொது அறிவியல் போன்ற பிரிவுகளில் தலா 15க்கு மேற்பட்ட தலைப்புகளில் காட்சிப்படுத்தப்பட்ட இதில், திட, திரவ, வெப்பத்தின் தாக்கம், அவை உருவாகும் விதம், வெப்பம், காற்று போன்ற இயற்கை மூலங்கள் உயிர்களிடையே ஏற்படுத்தும் மாற்றம், அவற்றின் தாக்கம், ஒலி-ஒளி போன்றவற்றின் நன்மை பயக்கும் வழிகளில் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளிட்டவை காண்போரை கவர்ந்தன.


திறனை மேம்படுத்தும்


எம்.பிச்சைமணி ,பெங்களூரு இஸ்ரோ முன்னாள் துணை இயக்குனர்: ஒவ்வொரு மாணவரும் ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர் முயற்சி மேற்கொண்டிருந்ததை தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தினர். அடிப்படை தத்துவம் சார்ந்த தங்களின் ஆய்வுக்கான வரைபடம், மாதிரிகள் போன்றவற்றை காட்சிப்படுத்தி இருந்தனர். பள்ளி வாழ்க்கை என்பது ரயில் தண்டவாளம் போன்றது. மதிப்பெண் பெறுவது உயர்கல்வி வாய்ப்புக்கான அடிப்படை. அதே வேளையில் இசை, இலக்கியம், அறிவியல் என பல்வேறு துறை சார்ந்த திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


--சிந்தனைத் திறனை மேம்படுத்தும்


கே.மலர்மணி,இஸ்ரோ முன்னாள் துணை பொது மேலாளர்: பாடப்புத்தக கல்வி மட்டுமின்றி இயற்கை முறையோடு இணைந்த இது போன்ற பயிற்சி வகுப்புகளும் மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தும். உயிரியல், வேதியியல், இயற்பியல், பொது அறிவியல் போன்ற தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். ஒவ்வொரு மாணவரின் ஆய்வுக்கான தலைப்பும், வழக்கமான நடைமுறைகளை, வித்தியாசமான நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தனர். அறிவியலின் அடிப்படை தத்துவத்தை மாணவர்கள் உணர்வதுடன், காண்போருக்கு எளிதாக உணர்த்தும் வகையில் படைப்புகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.


-அனுபவித்து உணரும் திறன்


பவித்ரா ,கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் :மாதிரிகளை மட்டுமே வைத்து அது தொடர்பான விவரங்களை மாணவர்கள் விளக்கும் வகையில் மட்டுமே இது வரை கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாக அறிவுறுத்தலின் பேரில் ஆய்வு ரீதியான முறையில் மாணவர்கள் ஈடுபடுத்த முடிவு செய்தோம். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அறிவியல் துறை சார்ந்த தலைப்புகளை தேர்வு செய்தனர். இதில் மாணவர்களின் ஈடுபாடு ஆர்வம் சிந்தனை திறன் போன்றவற்றை ஆய்வு கால வழிகாட்டலில் தெரிந்து கொண்டோம். இவற்றை முழுமையாக கண்காட்சியில் வெளிப்படுத்தியதை உணர முடிந்தது. அறிவியல் ஆர்வமுள்ள பாடப்பொருள் என்பதையும் வெறுமனே மனப்பாட முறை இல்லாமல் அனுபவித்து உணரும் திறன் என்பதை மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அறிய வாய்ப்பாக இருந்தது.


புதுமையான அனுபவம்


ஆன்டோஸ்ரீஜித், பத்தாம் வகுப்பு மாணவர்: வெறுமனே அறிவியல் கண்காட்சியாக மட்டும் இருந்த விடக்கூடாது என்பதற்காக விவசாயம் சார்ந்த அம்சமாக தலைப்பை தேர்வு செய்து இருந்தேன். மண்புழு உரத்தை வாழைப்பழம், வெங்காய தோல் உள்ளிட்ட காய்கறி கழிவுகளை பயன்படுத்தி இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறை குறித்த ஆய்வு நடத்தி இருந்தேன். அமில மழை சார்ந்த மண்ணின் அமிலத்தன்மை மாறுபாடு, புவி வெப்பத்தை எதிர்கொள்ளும் திறன் குறித்த அம்சங்கள் இதில் அடிப்படையாகும். இந்த வாய்ப்பு புதுமையான அனுபவமாக இருந்தது.--உணர்ந்து படிப்பதற்கு வழிநித்தின், 12ம் வகுப்பு மாணவர் : வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தலைப்புகளை மாணவர்கள் அனைவரும் தேர்வு செய்து இருந்தோம். தற்போதைய அடிப்படை தேவைகளில் ஒன்றாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் மாறி வருகிறது இதற்கு ஏற்ப இதனை வெவ்வேறு மூலங்களில் இருந்து பெரும் வழிகள் தொடர்பான ஆய்வு செய்திருந்தேன். இவற்றிற்கு மாற்றான வழிகளாக, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற பிற திரவங்களில் இருந்து இதனை பெரும் முயற்சியை பட்டியலிட்டு இருந்தேன். காய்கறி எண்ணெய், எத்தனால் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்திருந்தது. பாடப் பொருளை உணர்ந்து படிக்க இது போன்ற ஆய்வு முறைகள் ஊக்கமூட்டுகின்றன.


-- மாறுபட்ட முயற்சி


ஹெலன்பொன்ராம், பள்ளி முதல்வர் : மாறுபட்ட வகையில் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். மாணவர்களின் சிந்தனை, செயல், கல்வி மீதான ஆர்வம் ஆகியவற்றை முறைப்படுத்தி ஊக்கமூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரடி ஈடுபாட்டை உருவாக்கும் வகையில் மாணவர்களே ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்ள போதிய கட்டமைப்புகள் அமைத்து கொடுத்தோம். பாடப்பகுதியை சுமையாக கருதாமல் ஆர்வமுடன் உணர்ந்து படிக்க ஏதுவாக இதற்கென ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அமைந்திருந்தது.


கடை மாதிரிகளால் பயனில்லை


சுவாமிநாதன் ,பள்ளி தாளாளர் :கடைகளில் விற்பனையாகும் பிராஜெக்ட் மாதிரிகளை கொண்டு கண்காட்சி நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற வழக்கமான கண்காட்சியாக அமைந்து விடக்கூடாது என்பதில் பள்ளி நிர்வாகம் கவனமாக இருந்தது. இதற்காக மாணவர்களின் பாடப் பகுதிக்கு ஏற்ப தலைப்புகள் தேர்வு செய்ய ஆசிரியர்கள் உதவினர். வெறுமனே மாதிரிகளை கொண்டு பேரளவில் நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு எவ்வித பயணம் ஏற்பட போவதில்லை. மாணவர்களின் அறிவு சார்ந்த செயல்பாடுகளை திறன் வளர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வடிவமைத்தோம்.--

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X