பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்தும் மின்துறை அலட்சியம்

Added : செப் 04, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வாரிய பணிகளில் தனி நபர்கள் ஈடுபடும் அவலம் நீடிக்கிறது .இதை முளையிலே கிள்ளி எறிய மின்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .மாவட்டத்தில் ஏராளமான குக்கிராமங்கள் , மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மின்வாரிய அலுவலகங்களில் போதுமான பணியாளர்கள் இன்றி மின்வாரியத்தில்லாத நபர்கள் மின்சாரத்தை இயக்கும் நடவடிக்கையில்
 பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்தும் மின்துறை  அலட்சியம்



கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வாரிய பணிகளில் தனி நபர்கள் ஈடுபடும் அவலம் நீடிக்கிறது .இதை முளையிலே கிள்ளி எறிய மின்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .மாவட்டத்தில் ஏராளமான குக்கிராமங்கள் , மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மின்வாரிய அலுவலகங்களில் போதுமான பணியாளர்கள் இன்றி மின்வாரியத்தில்லாத நபர்கள் மின்சாரத்தை இயக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

பெரும்பாலான கிராமங்களில் வயர்மேன் ,மஸ்தூர் பணியாளர்கள் இல்லாத சூழலில் அந்தந்த கிராமங்களில் உள்ள நபர்கள் இதில் ஆர்வமுடன் ஈடுபட்டு, மின் கிராமத்தினர் வழங்கும் ஊக்குத்தொகையை பெற்று தங்களது வாழ்வாதாரத்தை வழி நடத்துகின்றனர். இவ்வாறான நிலையில் ஏராளமான இளைஞர்கள் மின் பணிகளில் உள்ளனர். இப்பணியில் ஈடுபடும் போது விபத்துக்கள் நேரிடும் பட்சத்தில் மின்வாரியத்தினர் தங்களுக்கு தெரியாது என கை விரிக்கின்றனர்.இவர்களை வைத்து மின் பணி செய்யும் அதிகாரிகள் இவர்களுக்கு சம்பளம் , ஊக்கத்தொகை ஏதும் அளிப்பதில்லை. இப்பணிகளில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும்பாலானோர் தங்களுக்கு மின்வாரியத்தில் பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் மன்னவனுார், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட மலைக்கிரமங்களும் தாண்டிக்குடி கீழ் மலை கிராமங்களிலும் ஏராளமான உள்ளூர் நபர்கள் மின்பணிகளில் ஈடுபடும் அவல நிலையே நீடிக்கிறது. இவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கொடை , சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் இது போன்ற வாரியத்தில்லாத நபர்களின் செயல்பாடுகளை கண்கானித்து விபத்துக்கள் நேரா வண்ணம் விழிப்புணர்வு,காலி பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.உயிர் பலியும் தொடர்கிறது கொடைக்கானல் மலைப்பகுதியை பொருத்தம்பட்டில் 70-க்கு மேற்பட்ட மலை கிராமங்களில் வாரியத்தில் அல்லாத கிராம நபர்களே மின் பணி இயக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்று கடந்த காலங்களில் பணிகளில் ஈடுபட்டவர்கள் சிலர் பலியாகி உள்ளனர். இவர்களது செயல்பாடுகளை கண்காணித்து ஊதியம் வழங்குதல் , பாதுகாப்பு நடவடிக்கை,பணிக்கொடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .விவேகானந்தன் சமூக ஆர்வலர் ,மன்னவனுார் .


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-செப்-202213:02:45 IST Report Abuse
Bhaskaran அவுட் சோர்சிங் கொடுத்து விடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X