ஒழுங்கு நடவடிக்கைகளை ஓய்வு பெற 3 மாதத்திற்கு முன்பே முடிக்க தீர்மானம்| Dinamalar

ஒழுங்கு நடவடிக்கைகளை ஓய்வு பெற 3 மாதத்திற்கு முன்பே முடிக்க தீர்மானம்

Added : செப் 04, 2022 | |
சிவகங்கை : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்பே முடிக்க வேண்டும் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஒழுங்கு நடவடிக்கைகளை  ஓய்வு பெற 3 மாதத்திற்கு முன்பே முடிக்க தீர்மானம்



சிவகங்கை : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்பே முடிக்க வேண்டும் உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவத்தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் முத்தழகு வரவேற்றார். மாநில செயலாளர் சி.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் மகாலிங்கம், துணைத்தலைவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார், சுப்பிரமணியன், நடராஜன், முருகேசன், ராஜமோகன், செயலாளர்கள்மூர்த்தி, ஜான் செல்வராஜ், கோமதிநாயகம், நாகராஜன், யுவராஜ், சுப்பிரமணியன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஊழியர் பணிக்காலத்தில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நடத்தி 3 மாதத்திற்குமுன்பே முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வதை நிறுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு 2022 ஜன., 1 முதல் வழங்க வேண்டும். செப்,20ல் மாவட்டத் தலைநகரில் நடக்கும் போராட்டத்தில் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் பங்கேற்பது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X