'பிராங்க் வீடியோ' எடுத்தால் ஜெயில் நிச்சயம்!

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
கோவை: ''பொது இடங்களில் குறும்பு வீடியோ எடுப்பதாக கூறி, அத்துமீறுவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பூங்காங்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பகுதிகளில் தனி நபர்கள் சிலர், பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: ''பொது இடங்களில் குறும்பு வீடியோ எடுப்பதாக கூறி, அத்துமீறுவோர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பூங்காங்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பகுதிகளில் தனி நபர்கள் சிலர், பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து 'பிராங்க் வீடியோக்கள்' என்று, யூடியூப் சேனல்களில் வெளியிடுவது அதிகரித்துள்ளது.latest tamil news
பலர், குறும்பு வீடியோக்களை தொழில் ரீதியாக செய்து யூடியூப் சேனலில் வெளியிட்டு, அதன் மூலம் பணமும் சம்பாதிக்கின்றனர். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள், அமைதியான சூழ்நிலையை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்கள் மத்தியிலும், நடை பயிற்சிக்காக மைதானங்களை நாடி வருபவர்கள் மத்தியிலும், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் மத்தியிலும் மிகுந்த தாக்கத்தையும், திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.

சில வீடியோக்களில் நடிப்பவர்கள், பொது வெளியில் முகம் சுழிக்கும் வண்ணம் எதிர்பாலினத்தாரை தற்செயலாக நடப்பது போல் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.

திடீரென்று நிகழும் இந்த வரம்பு மீறிய செயல்களானது, சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக அதிர்ச்சியையும், மன ரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது.வயதானவர்கள், பெண்களிடையே விரும்பத்தகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோக்கள், யூடியூப் சேனல்களில் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றியும், அவருக்கு தெரியாமலும் வெளியிடப்படுவதால், அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


latest tamil news
கோவை மாநகரிலும், சமீப காலமாக பிராங்க் வீடியோக்கள் என்ற பெயரில் ரேஸ்கோர்ஸ் போன்ற மக்கள் கூடும் இடங்களில், நடைபெறும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், புகாரும் எழுந்து வருகிறது.

கோவை மாநகரில் எவரேனும் 'பிராங்க் வீடியோ' எடுத்தல் என்ற விதத்தில், பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அது பற்றிய புகார் வந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதியப்படும்.

வீடியோ சேனலும் முடக்கப்படும்.புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களின் மீது, தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில் பல்வேறு சட்டப்பிரிவுகளின்படி, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Unmai Vilambi - Neelgiri,இந்தியா
05-செப்-202200:59:27 IST Report Abuse
Unmai Vilambi Frank videos can be taken for their own family members.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-செப்-202218:43:59 IST Report Abuse
MARUTHU PANDIAR இது மாதிரி இப்போதைய ஒவ்வொரு கண்ராவிக்கும் ஒவ்வொரு பெயரை சூட்டி விடுறானுக++++++=இதுக்கு பிரான்க் வீடியொன்னு பேர் வெச்சுட்டாக்க அது சட்டப் படியான,,,,அங்கீகரிக்க பட்ட,,, அல்லது பட வேண்டிய ஒரு சகஜமான விஷயம் தானென்று ஆக்கி விட்டுறானுவ+++மக்களும் யோசிப்பதில்லை++++அது அப்படியே விட்டு விட்டு தலைக்கு மேல் வளர்ந்து அதன் பின் தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது+++++++இவனுவ கையில் காமிரா மைக் சர்வ சாதாரணமாக கிடைப்பதால் தான் இப்படி+++++இது சும்மா ஒரு ஜாலியான ஒரு சிம்பிள் மேட்டர் தானே,, இதுக்குப் போய் இப்படியா என்று கேப்பானுக++++அதாவது முதலில் மக்களை வளைத்துப் போடுவது,, பிறகு சட்டத்துக்கே சவால் விடுவது+++++தடை செய்வது தவிர வேறு வழி இல்லை++++இது ஒரு சமூகக் கேடாக மாறி வருகிறது+++++
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-202215:40:30 IST Report Abuse
venugopal s ப்ராங்க் வீடியோ என்ற பெயரில் ரொம்ப ஓவராகத் தான் போகிறது.நிச்சயமாக நடவடிக்கை தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X