தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா செவ்வாய்பேட்டை அருகே பிரம்புவயலைச் சேர்ந்தவர் சேசுரத்தினம். 65., திருவாடானை தாலுகா நத்தக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ். 50., நெல் வியாபாரி. 2016ல் சேசுரத்தினம் மூலம் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு 400 நெல் மூடைகளை நாகராஜ் கொள்முதல் செய்தார். ரூ. 4 லட்சத்திற்கு இரண்டு தவணைகளாக ரூ. இரண்டு லட்சம் மட்டும் நாகராஜ் கொடுத்துஉள்ளார். ஐந்து ஆண்டுகளாக பாக்கி தொகை ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் தரவில்லை. பல முறை கேட்டும் தராததால் சேசு ரத்தினம் போலீசில் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் பணம் தருவதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.ஆறு மாதமாகியும் நாகராஜ் கூறியபடி பணத்தை தராததால் கடந்த வாரம் நாகராஜ் வீட்டிற்கு சென்று சேசுரத்தினம் கேட்டார். கோபமடைந்த நாகராஜ் அசிங்கமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்துஉள்ளார்.