இந்தியாவில் புதிதாக 6,809 பேருக்கு கோவிட்| Dinamalar

இந்தியாவில் புதிதாக 6,809 பேருக்கு கோவிட்

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | |
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 6,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,809 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,56,535 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 8,414 பேர் நலமடைந்ததால், வைரஸ்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 6,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,809 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,56,535 ஆனது.


latest tamil news


கடந்த 24 மணி நேரத்தில், 8,414 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,73,430 ஆனது. தற்போது 55,114 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கோவிட் காரணமாக 21 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,991 ஆக உயர்ந்தது.


latest tamil news


இந்தியாவில் இதுவரை 213.20 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X