பதவி நாற்காலிக்காக நீங்க அடிச்சுக்கிறதை பார்த்து, வேதனையில தான் இருக்காங்க!

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி:உயர் நீதிமன்ற தீர்ப்பால், அ.தி.மு.க.,வின், 1.50கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். தீர்ப்பு வந்து விட்டதால், அடுத்தது கட்சியின் பொதுச்செயலர் தேர்தல் நடக்கும். பழனிசாமி நிரந்தர பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவார். அ.தி.மு.க.,வில் இல்லாதவர்களும், அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்களும் தான், ஓ.பி.எஸ்., உடன் சேருகின்றனர். அ.தி.மு.க.,வில்
தங்கமணி, செம்மலை, அன்புமணி, கார்த்தி சிதம்பரம்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி:உயர் நீதிமன்ற தீர்ப்பால், அ.தி.மு.க.,வின், 1.50கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். தீர்ப்பு வந்து விட்டதால், அடுத்தது கட்சியின் பொதுச்செயலர் தேர்தல் நடக்கும். பழனிசாமி நிரந்தர பொதுச்செயலராக தேர்வு செய்யப்படுவார். அ.தி.மு.க.,வில் இல்லாதவர்களும், அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்களும் தான், ஓ.பி.எஸ்., உடன் சேருகின்றனர். அ.தி.மு.க.,வில் இருந்து எந்த தொண்டனும் அங்கு செல்லவில்லை.

எந்த அ.தி.மு.க., தொண்டனும் மகிழ்ச்சியாக இல்லை... பதவி நாற்காலிக்காக நீங்க அடிச்சுக்கிறதை பார்த்து, வேதனையில தான் இருக்காங்க!


அ.தி.மு.க., அமைப்பு செயலர் செம்மலை பேட்டி: இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமியை, பொதுக்குழு தேர்வு செய்தது. தற்போதைய உயர் நீதிமன்ற தீர்ப்பு, அவரது தேர்வை உறுதிப்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வகுத்த விதிகளின்படி, தொண்டர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும்.அதன்படி விரைவில் தேர்தல் நடத்தி, பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். அ.தி.மு.க.,வில் ஒரு வாரமாக நிலவிய குழப்பத்துக்கு, உயர் நீதிமன்ற தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அது, முற்றுப்புள்ளி என்பதை நீங்க எப்படி தீர்மானிக்க முடியும்... அடுத்த களமான உச்ச நீதிமன்றத்தின் கையில் அல்லவா இறுதி முடிவு இருக்கிறது!


பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: தமிழக அரசு துறைகளில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து, ஆய்வு செய்ய குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது, பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும்.

காலியிடங்கள்ல சில அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக அமர்ந்து, சலுகைகளை அனுபவித்து கொண்டு இருக்காங்களே... அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முடிவை வரவேற்கலாமே!


தமிழக பா.ஜ., துணைத் தலைவர்நாராயணன் திருப்பதி அறிக்கை: சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஸ்ரீதர் என்ற இளைஞரை, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன், 5,000 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை, ஒரு கும்பல் பறித்து உள்ளது. சென்னையின் மையப் பகுதியான சைதாப்பேட்டையில் இந்த, சம்பவம் நடந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களை செய்பவர்களை, 'செய்து முடிக்கும்' சம்பவங்களைத் தான் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

'சம்பவம்' செய்வோருடன், 'சம்பந்தம்' வச்சிருக்கிற போலீசார் எதையும், 'செய்து முடிக்க' மாட்டாங்க என்பது தான் நிதர்சனம்!


சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:முதல்வர் ஸ்டாலின், 16 மாத ஆட்சியில் சுறுசுறுப்பாகவும், மக்களை எளிதில் அணுகுபவராகவும் செயல்படுகிறார்.


latest tamil newsகாகிதத்தில், 'சாப்பாடு' என எழுதி காட்டினால், பசியாறுமா...? அந்த மாதிரி, மக்களை அடிக்கடி பார்த்தால் மட்டும் போதாது... அவங்க குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் தான், நல்ல முதல்வர் என்ற பெயரை எடுக்க முடியும்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுமக்கள் நலன் கருதி, சுங்கக் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் சாலைகள் பராமரிப்பு இல்லாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், விதிகளுக்கேற்ப சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை குறைக்க, சுங்கக் கட்டண உயர்வை குறைக்க, தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிக்கடி மாநில சுற்றுப்பயணம் போகும் உங்களுக்கு, சுங்க கட்டணம் கட்டி, கட்டுப்படி ஆகலையா?


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி பேட்டி: பன்னீர்செல்வம், 'என் தலைமையில் கட்சி இருக்க வேண்டும்' என, எங்காவது கூறியுள்ளாரா? சாதாரண தொண்டர் கூட முதல்வராக முடியும் எனக்கூறும் பழனிசாமி, தொண்டரை முதல்வர் பதவிக்கோ, கட்சி தலைமை பதவிக்கோ கொண்டு வருவாரா?

பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சாதாரண தொண்டர்களா இருந்து தானே, முதல்வர் ஆனாங்க... தி.மு.க., மாதிரி பட்டத்து இளவரசர்களா இருந்து பதவிக்கு வரலையே!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 'நீட்' தேர்வில்தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக, தென்காசி மாவட்டம், குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து உள்ளார். ஏற்கனவே, பல்லாயிரம் முறை நான் கூறியவாறு, நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு. இதை புரிந்து, நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

'நீட்' தேர்வில் விலக்கு என்பது, இனி நடக்க சாத்தியமே இல்லை. இது, மூத்த அரசியல்வாதியான தங்களுக்கு தெரியாதா?


அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டி: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, தமிழக நிதியமைச்சர் தியாகராஜனின் நிழலாக செயல்படுகிறார். அமைச்சர் 'கீ' கொடுத்தால் மட்டுமே, பொம்மை போல மேயர் செயல்படுகிறார். எந்த திட்டங்களும் இன்றி, மாநகராட்சி செயல்படாமல் உள்ளது.

மதுரையில் மேயர்னு ஒருவர் இருக்கிறார் என்பதே, தங்களது பேட்டி மூலம் தான் தெரியவருது!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
04-செப்-202217:33:52 IST Report Abuse
r.sundaram ஒரு மருத்துவரான, படித்தவர் பேசும் பேச்சு தானா இது? நீட்டினால் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேர்ந்திருக்கிறார்கள் என்பது இவருக்கு தெரியாதா? நீட் நீட் என்று திமுக கூவுவது, மருத்துவ கல்லூரி நடத்தும் கட்சிக்காரர்கள் நலனுக்காகவே என்பதை அறியாரா ராமதாஸ்? இல்லை இவருக்கும் மருத்துவ கல்லூரி இருக்கிறதோ? அதனால் இப்படி பேசுகிறாரா?
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
04-செப்-202216:33:37 IST Report Abuse
கல்யாணராமன் சு. மருத்துவர் அய்யா பேசாமல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம் ......... பேசுவதெல்லாம் ஒரே பேத்தலாக இருக்கிறது ... இப்பல்லாம் 10 12 வகுப்பு படிக்கிறவங்களும் தோல்வி பயத்தால் தற்கொலை பண்ணிக்கிறாங்க ... அந்த தேர்வையும் நிறுத்திடலாமா ?? பெற்றோர்கள் திட்டினாங்கன்னு தற்கொலை பண்ணிக்கிறாங்க .... பெற்றோர்களை ஒழிச்சுடலாமா இல்லை சிறையிலே போட்டுடலாமா ? பேத்துவதற்கும் ஒரு அளவு வேண்டும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-செப்-202213:28:48 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸ் கட்சி குடும்ப ஆதிக்கத்தால் அழிந்தது. அதிமுக, இந்த இருவரால் அழிந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து என்ன புரிகிறது. ஒரு கட்சியை அழிக்க மற்ற கட்சிகள் எதுவும் பெருஸ்ஸா கஷ்டப்படவேண்டாம். அந்த அந்த கட்சிக்கு உள்ளேயே எதிரிகள் உள்ளனர் என்பதை அல்லவா இது எடுத்துக்காட்டுகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X