செய்திகள் சில வரிகளில் கிருஷ்ணகிரி

Added : செப் 04, 2022 | |
Advertisement
1,934 இடங்களில் இன்றுகொரோனா தடுப்பூசி முகாம்தர்மபுரி, செப். 4-தர்மபுரி மாவட்டத்தில் இன்று, 1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் இன்று, 35வது கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார


1,934 இடங்களில் இன்று
கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி, செப். 4-
தர்மபுரி மாவட்டத்தில் இன்று, 1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் இன்று, 35வது கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உட்பட, 1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இதில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். மாவட்டத்திலுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, தர்மபுரி மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
அரூர், செப். 4-
அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட சங்கிலிவாடியில், தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி செல்லம்பட்டி பஞ்., அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். இதில், சங்கிலிவாடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் இடையூறு ஏற்படும்போது, அதற்கு நிரந்தரமான மாற்று ஏற்பாடு மூலம், குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மேலும், 100 நாள் உறுதி
திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் குமார், கோவிந்தன்,
ஏழுமலை, நேரு உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க., பயிற்சி பாசறை
ஏரியூர், செப். 4-
தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டத்தில் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று, பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்ப
சேகரன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் வரவேற்றார். ஐடி விங் மாநில அமைப்பாளர் கோவி லெலின் திராவிட இயக்க வரலாறு குறித்தும், சூர்யா சேவியர் மாநில சுயாட்சி குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், பிரகாஷ், மகேஷ்குமார், செல்லதுரை, சிட்டிபாபு, சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞரணியினர் வெண் சீருடையில் பங்கேற்று, திராவிட மாடல் குறித்து பயிற்சி பெற்றனர்.
இளம்பெண் மர்மச்சாவு
ஓசூர், செப். 4-
தேன்கனிக்கோட்டை அருகே, டி.மல்லசந்திரத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகள் சுப்ரியா, 19; தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குளிக்க சென்றவர் கால் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில், தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ்
விசாரித்து வருகிறார்.
கார் மீது மோதி கவிழ்ந்த
லாரி; 4 பேர் படுகாயம்
தொப்பூர், செப். 4-
மஹாராஷ்டிராவில் இருந்து கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி வழியாக ஈரோட்டுக்கு லாரி ஒன்று சென்றது. லாரியை பவானியை சேர்ந்த கோபால், 58, ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் உடன் வந்தார். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு தொப்பூர் கணவாயில் லாரி சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் கோபாலின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் கோபால், மாற்று டிரைவர் ராஜேந்திரன் மற்றும் காரிலிருந்த கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 62, அவர் மனைவி கலா, 56 ஆகிய, நான்கு பேர் படுகாயமடைந்தனர். தொப்பூர் போலீசார், காயமடைந்த, நான்கு பேரையும் மீட்டு, சேலம், அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரிக்கின்றனர்.
மயங்கி விழுந்த
இன்ஜினீயர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 4--
பொம்மிடி அடுத்த கந்தகவுண்டன் கொட்டாயை சேர்ந்தவர் சுந்தரம் மகன் கவுதம், 29; இவர், டி.எம்.இ., படித்துவிட்டு, ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி கடந்த, 9 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 7:30 மணியளவில் அவரது வீட்டுக்கு வெளியே திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அங்கிருந்தோர் அவரை, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ
மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகார் பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
அ.தி.மு.க., நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம்
ஊத்தங்கரை, செப். 4-
ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி மற்றும் அனுமன்தீர்த்தம் ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஊத்தங்கரை, அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தொகுதி செயலாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில், மாஜி., ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி பட்டுக்கூடு ஏலத்துக்கு அதிகரித்த விவசாயிகள் வருகை
தர்மபுரி, செப். 4-
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று விவசாயிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், ஏழுக்கும் குறைவான விவசாயிகளே ஏலத்தில் பங்கேற்றனர்.
பின் விவசாயிகள் வருகை அதிகரித்து, நேற்று முன்தினம், 30 பேரும் நேற்று, 52 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். அவர்கள், 89 குவியல்களாக, 3,454 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 328 முதல், 690 ரூபாய் வரை சராசரியாக, 535 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 18 லட்சத்து, 48 ஆயிரத்து, 599 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால், 27 ஆயிரத்து, 722 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
கடத்துார் காலனியில் ஆர்.டி.ஓ., விசாரணை
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 4--
கடத்துார் டவுன் பஞ்.,ல் கடந்த, 2004ல் அரசால் ஆதி
திராவிடர்களுக்கு, 238 வீட்டு
மனைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அந்த வீட்டுமனைகளில் உண்மையாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டதையடுத்து, அரூர் ஆர்.டி.ஓ., விஸ்வநாதன், ஆதிதிராவிட காலனி பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, தாசில்தார் சுப்பிரமணியன், ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மில்லர் உள்ளிட்ட வருவாய்
துறையினர் பங்கேற்றனர்.
தி.மு.க., இளைஞரணி ஆலோசனை கூட்டம்
ஓசூர், செப். 4-
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், 'இல்லம் தோறும் இளைஞரணி' என்ற திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், ஓசூரில் நேற்று நடந்தது. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., பேசுகையில், ''இல்லந்தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை, மாநில செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார். எனவே, 18 முதல், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதுவும் அவர்களின் வீடுகளுக்கே சென்று, 100 சதவீதம் உண்மை தன்மையுடன் உறுப்
பினராக இணைக்க வேண்டும்,'' என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், இளை
ஞரணி உறுப்பினர் படிவங்களை, எம்.எல்.ஏ., பிரகாஷ் வழங்கினார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, முன்னாள்
எம்.எல்.ஏ., முருகன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X