கல்லூரி மாணவியருக்கு நிதியுதவி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு| Dinamalar

கல்லூரி மாணவியருக்கு நிதியுதவி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

Added : செப் 04, 2022 | |
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கல்லுாரியில் படிக்கும் மாணவியருக்கு, தமிழக அரசின் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மாதம், 1,000 ரூபாய் வழங்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. இத்திட்டப்படி, அரசு பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகள், மருத்துவம், சட்டம், வேளாண், கால்நடை


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கல்லுாரியில் படிக்கும் மாணவியருக்கு, தமிழக அரசின் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மாதம், 1,000 ரூபாய் வழங்கும் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.
இத்திட்டப்படி, அரசு பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லுாரிகள், மருத்துவம், சட்டம், வேளாண், கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி படிக்கும் மாணவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும். அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்து, கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்ட, பல்வேறு உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக, சம்மந்தப்பட்ட மாணவியருக்கு வங்கி கணக்கு
கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, கல்லுாரி நிர்வாகத்தினர், வங்கியாளர்கள், சமூக நல அலுவலர் ஆகியோரிடம், கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X