சத்துணவில் அட்டை பூச்சி அமைப்பாளர் 'சஸ்பெண்ட்'

Added : செப் 04, 2022 | |
Advertisement
பள்ளியில் அட்டை பூச்சியுடன் உணவு பரிமாறப்பட்ட விவகாரத்தில் சத்துணவு அமைப்பாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அடுத்த திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், 140 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு கடந்த ஆக., 23ல், மதிய சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது, 3ம் வகுப்பு மாணவி துர்காநந்தினிக்கு வழங்கிய உணவில் அட்டைப்பூச்சி கிடந்தது.


பள்ளியில் அட்டை பூச்சியுடன் உணவு பரிமாறப்பட்ட விவகாரத்தில் சத்துணவு அமைப்பாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அடுத்த திருவளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், 140 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு கடந்த ஆக., 23ல், மதிய சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது, 3ம் வகுப்பு மாணவி துர்காநந்தினிக்கு வழங்கிய உணவில் அட்டைப்பூச்சி கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், சக மாணவியர், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
அதை பொருட்படுத்தாமல், அட்டை பூச்சியை எடுத்து வீசிவிட்டு, அதே சத்துணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது. அதை உட்கொண்ட துர்காநந்தினிக்கு, மறுநாள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு, சுகாதாரமற்ற முறையில் சத்துணவு தயாரிப்பதாக குற்றம்சாட்டினர்.
தலைமையாசிரியர் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி, 58, சமையலர் ஜெயந்தியிடம், வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தனித்தனியே விசாரித்தார். அதன் அறிக்கை கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து விமலாதேவியை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று முன்தினம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X