கோவிட், உக்ரைன் போரின் போது இந்தியா உதவி: வங்கதேச பிரதமர் நன்றி

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
டாகா: கோவிட் தடுப்பூசி வழங்கியும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போதுஅங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.அரசு முறை பயணமாக ஷேக் ஹசீனா நாளை(செப்.,5) இந்தியா வருகிறார். இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: உக்ரைன் மீது ரஷ்யா
bangladesh, india, narendramodi, Sheikh Hasina, primeminister,

டாகா: கோவிட் தடுப்பூசி வழங்கியும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போதுஅங்கு சிக்கி தவித்த இந்திய மாணவர்களுடன் வங்கதேசத்தை சேர்ந்த மாணவர்களை மீட்டதற்காக பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஷேக் ஹசீனா நாளை(செப்.,5) இந்தியா வருகிறார். இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி:
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய போது, இந்தியா அளித்த உதவிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உக்ரைனில் சிக்கி தவித்த வங்கதேச மாணவர்கள், அடைக்கலம் கேட்டு, போலந்து வந்தனர். அங்கிருந்து இந்திய மாணவர்களுடன் வங்கதேச மாணவர்களையும் இந்திய அரசு பாதுகாப்போடு அழைத்து வந்தது. இதன்மூலம் தெளிவான நட்புறவை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தடுப்பூசிகள் வங்கதேசத்திற்கு மட்டுமல்லாமல், தெற்கு ஆசிய நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இது மிகவும் உதவியாக இருந்தது. மோடி எடுத்த ஆக்கப்பூர்வமான முயற்சி இது. இது மட்டுமல்லாமல் எங்களது சொந்த பணத்திலும் தடுப்பூசி வாங்கி பயன்படுத்தினோம்.


latest tamil news
கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்டிருக்கிறோம். உக்ரைன் - ரஷ்யா போரை பார்த்து வருகிறோம். அதனால் சில பாதிப்புகள் இருந்தாலும் எங்களது பொருளாதாரம் வலுவாக உள்ளது. கடன்களை உரிய காலத்தில் செலுத்தி வருகிறோம். இதனால், கடன் விகிதமும் கட்டுக்குள் உள்ளது பொருளாதார வளர்ச்சி திட்டமிட்டபடி செல்கிறது. இலங்கை போல பொருளாதார நெருக்கடியை வங்கதேசம் சந்திக்காது. இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-செப்-202219:49:00 IST Report Abuse
MARUTHU PANDIAR வங்க தேசம் என்ற பெயருடன் இருந்து வரும் கிழக்கு பாகிஸ்தான் ஆசாமிங்க பாக்கித்தானுக்கு கொஞ்சமும் சளைத்தவங்க இல்ல++++++++சட்ட விரோத பசு கடத்தல், சட்ட விரோத ரோஹிங்கியா ஊடுருவல் இப்படி அனு தினமும் இந்தியாவின் முதுகில் குத்திய படி தான் இருக்கானுங்க ++++++++எதுக்கு விட்டு வெக்கறாங்களோ கடவுளுக்குத்தான் தெரியும்.
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
04-செப்-202216:16:30 IST Report Abuse
V Gopalan Prime Minister of India just for getting a name go on extending help to Srilanka, Bangaladesh, Pak, Nepal and all these tiny countries are always support to China only availing maximum help from India at the cost of Indian Citizens. These countries are known for backstabbing. Number of temples demolished and Hindus are beaten up in Bangladesh.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
04-செப்-202215:15:36 IST Report Abuse
Soumya இந்த மூர்க்க கூட்டத்தை நம்பவே கூடாது முதுகில் குத்துவது அவனுங்களோட குணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X