உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும், பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டடங்களை பராமரிக்க ரூ315 கோடி நிதி ஒதுக்கி புதுப்பிக்கும் பணிகளும்
Chennai,DMK,MKStalin,Stalin,Supreme Court,உச்ச நீதிமன்றம்,சென்னை,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


latest tamil news

சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும், பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி கட்டடங்களை பராமரிக்க ரூ315 கோடி நிதி ஒதுக்கி புதுப்பிக்கும் பணிகளும் துவங்கின.பங்கேற்பு:


உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் .கே. கவுல், இந்திரா பானர்ஜி, ஐகோர்ட் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.latest tamil news

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்றம் 160 வருடங்கள் பழமையானது. உயர்நீதிமன்ற கட்டடம் கம்பீரமானது. அதே போல் புதிதாக அமைய இருக்கும் சட்டக்கல்லூரி கட்டடமும் கம்பீரமாக இருக்க வேண்டும். சென்னையில் அமைந்துள்ள பல்வேறு பாரம்பரிய கட்டடங்கள் நாம் செம்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும்.


பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பது வரலாற்றை பாதுகாப்பதாகும். ஒரே இடத்தில் நீதிமன்றம் இருப்பது, பொதுமக்கள், வழக்கறிஞர்களுக்கு வசதியாக இருக்கும். நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீதியும், நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் கலந்தவை ஆகும்.


latest tamil news

தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் 35 புதிய நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசின் சார்பில் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (35)

BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
05-செப்-202202:43:29 IST Report Abuse
BASKAR TETCHANA ஆமாம் உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தகுந்தாற் போல் தீர்ப்புகள் திருத்தி பிâநம் கொடுத்து எந்த கேசும் தள்ளுபடி பண்ணி விடலாம். என் என்றால் இவர்களின் கட்சி வழக்குகள் நிறைய நிலுவையில் உள்ளான.எல்லாவற்றையும் வரும் தலைமை நீதிபதியை சரிக்கட்டி எல்லா கேஸையும் தள்ளுபடி பண்ணி விடலாம். இப்போது தான் நீதிகள் விற்கப்படும் .
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
04-செப்-202220:26:04 IST Report Abuse
V GOPALAN There should be a separate Supreme Court only to Tamilnadu. Dravidar should be the Chief Justice. There should be separate Civil and, Criminal act only in தமிழ் CJ should have passed Law Degree onlybfrom Tamilnadu Ambedkar University. This is Dravida Model Type. Thiruma and Vaiko should be the Pael members to recomm CJ to aTsmilnadu Supreme Court
Rate this:
Cancel
04-செப்-202219:21:40 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K அப்போது தானே தாங்கள் நினைத்த தீர்ப்பை இங்கேயே நீதிபதிகளை கைக்குள் போட்டு கொண்டு பெற முடியும். இதுபோலத் தானே ஏற்கனவே உயர்நீதி மன்ற மதுரை கிளை ஆரம்பித்து வைகோவும், கம்யூனிஸ்டுகளும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X