படிக்கட்டு பயணத்தை தவிர்க்ககூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு| Dinamalar

படிக்கட்டு பயணத்தை தவிர்க்ககூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு

Added : செப் 04, 2022 | |
''பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த மதிப்பீட்டாளர்கள் பயிலரங்கை, அமைச்சர் நேற்று துவங்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு

''பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த மதிப்பீட்டாளர்கள் பயிலரங்கை, அமைச்சர் நேற்று துவங்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் ஒரு மாணவன் இறந்த சம்பவத்திற்கு பின், மாணவர்களுக்கு படிக்கட்டில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.இதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மேலாண் இயக்குனர்கள் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது.தேவைப்படும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட பஸ்களில், 75 சதவீதம் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தவில்லை.போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, 97 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.அவர்களுக்கான பணம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 21 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்களில் பொது மக்கள் பயணிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கும்போது, சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X