சுற்றுலா பயணிகளைஈர்க்கும் 'சைக்லோமைன்'

Added : செப் 04, 2022 | |
Advertisement
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் 'சைக்லோமைன்' மலர்கள் பயணிகளை கவர்ந்து வருகிறது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது 'சீசன்' துவங்கியுள்ளது. இதற்காக, கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த, இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லுாபின், காஸ்மஸ், கூபியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம்,
சுற்றுலா பயணிகளைஈர்க்கும் 'சைக்லோமைன்'

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் 'சைக்லோமைன்' மலர்கள் பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது 'சீசன்' துவங்கியுள்ளது. இதற்காக, கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த, இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லுாபின், காஸ்மஸ், கூபியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரைசாந்திமம், கேலண்டுமா, ஹெலிக்ரைசம், சப்னேரியா என, 60 வகையான மலர்கள் பூங்காவில் தயாராக உள்ளன.தவிர, 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, ஆந்துாரியம், கேலா லில்லி போன்ற, 30 வகையான மலர்கள் தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

கண்ணாடி மாளிகையில், 500 தொட்டிகளில் சிவப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களில் 'சைக்லோமைன்' மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.பூங்கா நிர்வாகம் கூறுகையில்,'அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது 'சீசன்' துவங்கியுள்ள நிலையில், 4 லட்சம் மலர்கள், மாடங்களில் காட்சிப்படுத்த, 10 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து வருகிறது' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X